உள்ளூர் செய்திகள்

கழிவறை தொட்டிக்குள் விழுந்து தவித்த இளம்பெண்

Published On 2023-02-16 08:53 GMT   |   Update On 2023-02-16 08:53 GMT
  • கழிவறை தொட்டிக்குள் விழுந்து தவித்த இளம்பெண்ணை மீட்டனர்.
  • இதனால் அந்த பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

வாடிப்பட்டி

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே பாலன் நகரை சேர்ந்தவர் திருப்பதி. இவர் தனது வீட்டில் கழிப்பறை மற்றும் குளியலறை தனித்தனியாக அருகருகே கட்டியுள்ளார். இதில் கழிவறை தொட்டியின் மேற்பகுதியிலேயே கழிவறை இருக்கும்படி கட்டியுள்ளனர்.

இந்தநிலையில் இன்று காலை திருப்பதியின் 21 வயது மகள் கழிவறைக்குச் சென்றார். அப்போது திடீரென்று எதிர்பாராதமாக கழிவறை தளம் கோப்பையோடு இடிந்து விழுந்துள்ளது. இதனால் அவர் செப்டிக் டேங்க் தொட்டிக்குள் விழுந்து கூச்சலிட்டுள்ளார். அவரது அலறல் சத்தத்தைக் கேட்டு பெற்றோர் வந்து பார்த்தனர். அப்போது கழிப்பறை தளம் இடிந்து செப்டிக் டேங்க் தொட்டிக்குள் மகள் விழுந்து கிடப்பது தெரியவந்தது.

இதைக்கண்டு அதிர்ச்சி யடைந்த அவர்கள் உடனடியாக வாடிப்பட்டி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு நிலைய அதிகாரி சதக் அப்துல்லா தலைமையில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் செப்டிக் டேங்க் தொட்டிக்குள் விழுந்து தவித்த இளம் பெண்ணை மீட்டனர். இதனால் அந்தப் பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News