உள்ளூர் செய்திகள்

ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்க விண்ணப்பிக்கலாம்

Published On 2023-02-04 08:33 GMT   |   Update On 2023-02-04 08:33 GMT
  • ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்க டெண்டர் விடப்பட்டுள்ளது.
  • வருகிற 23-ந்தேதிக்குள் இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

மதுரை

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு மதுரை மாவட்டம் புகழ் பெற்றது. இங்கு அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய பகுதிகளில் ஆண்டு தோறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை உள்ளூர் பொதுமக்கள் மட்டுமின்றி, வெளிநாட்டவரும் கண்டுகளிக்க வசதியாக பிரமாண்ட அரங்கம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.

இதனைத் தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு அரங்கத்திற்கான இடம் தேர்வு செய்யும் பணி தொடங்கியது. அப்போது அலங்காநல்லூரை அடுத்த கீழக்கரை கிராமத்தில் 65 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டது.

இதற்கிடையே மதுரையில் ஜல்லிக்கட்டு அரங்கம் அமைப்பதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடந்தன. இதற்கான டெண்டரை தமிழகஅரசு வெளியிட்டுள்ளது.

இந்த டெண்டரில் பங்கேற்க விரும்பும் நிறுவனங்கள் வருகிற 23-ந்தேதிக்குள் தங்களது ஒப்பந்தப்புள்ளிகளை இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

Tags:    

Similar News