உள்ளூர் செய்திகள்

பெண்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன்

Published On 2023-08-03 06:24 GMT   |   Update On 2023-08-03 06:24 GMT
  • தேவகோட்டை முத்து மாரியம்மன் கோவிலில் ஆடி உற்சவ விழா நடந்தது.
  • கோவில் முன்பு பூக்குழி இறங்கி பக்தர்கள் தங்கள் நேத்து கடனை செலுத்தினர்.

தேவகோட்டை

தேவகோட்டை அருணகிரிபட்டினம் பகுதியில் மிகப் பழமையான முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் ஆடி உற்சவ விழா நடைபெறுவது வழக்கம் கடந்த கொரோனா காலகட்டத்தில் திருவிழாக்கள் நடைபெற்றது அதனை தொடர்ந்து சென்ற ஆண்டு இரு பிரிவினர் இடையே கருத்து வேறுபாடுகளால் திருவிழா தடைபட்டது. இந்த ஆண்டு ஆடி உற்சவ விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. காப்பு கட்டிய நாள் முதல் ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் அபிஷேகமும் நடைபெற்றது. 31ந்தேதி சுமார் 5000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட பூச்சொரிதல் விழாவும் நேற்று இரவு சக்தி கரகம் எடுத்தல் நடைபெற்று சக்தி கரகம் வீதி உலா வந்தடைந்தது.

ஆடி பெருவிழாவின் முக்கிய நிகழ்வான பால்குடம், தீச்சட்டி, வேல் குத்துதல் போன்ற சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கருதாவூரணி விநாயகர் கோவிலில் இருந்து செங்கக்கோவிலார் வீதி, கண்டதேவி ரோடு போன்ற முக்கிய விதிகள் வழியாக வலம் வந்து கோவில் முன்பாக பூக்குழி இறங்கி பக்தர்கள் தங்கள் நேத்து கடனை செலுத்தினர்.

Tags:    

Similar News