உள்ளூர் செய்திகள்

தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல் அமைச்சருமான கலைஞர் 5-ம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. அருகில் நிர்வாகிகள் உள்ளனர்.

கலைஞர் நினைவுதினத்தையொட்டி நலத்திட்ட உதவி

Published On 2023-08-08 14:01 IST   |   Update On 2023-08-08 14:01:00 IST
  • திருமங்கலத்தில் கலைஞர் நினைவுதினத்தையொட்டி நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.
  • தெற்குமாவட்ட செயலாளர் மணிமாறன் வழங்கினார்.

திருமங்கலம்

தமிழக முன்னாள் முதல் வர் கலைஞரின் 5-ம் ஆண்டு நினைவுநாள் அனுஷ்டிக்கப்பட்டது. இதனையொட்டி மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் திருமங்கலம் நக ராட்சி அலுவலகத்திலிருந்து மதுரை ரோட்டில் அமைந் துள்ள மாவட்ட தி.மு.க. அலுவலகம் வரையில் மாவட்ட செயலாளர் மணி மாறன் தலைமையில் அமைதி பேரணி நடைபெற் றது.

தொடர்ந்து மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த கலை ஞர் படத்திற்கு மாவட்ட செயலாளர் தலைமையில் தி.மு.க.வினர் மலரஞ்சலி செலுத்தினர். பின்னர் அரிசி மூடை, மளிகை பொருள்கள், சேலை, வேட்டி உள்ளிட்ட ரூ. 20 லட்சம் மதிப்புள்ள நலத் திட்ட உதவிகளை தெற்கு மாவட்ட செயலாளர் மணி மாறன் பொதுமக்களுக்கு வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் அவை தலைவர் நாகராஜன், தலை மை செயற்குழு உறுப்பினர் கள் ஏர்போர்ட்பாண்டி, மாநில விவசாய அணி இணைச் செயலாளர் முன் னாள் எம்.எல்.ஏ. முத்து ராமலிங்கம், துணை செய லாளர் லதா அதியமான், மீனவர் அணி அமைப்பாளர் ஆலங்குளம் செல்வம், ஒன்றிய செயலாளர்கள் தன பாண்டியன், ராமமூர்த்தி, ஆலம்பட்டி சண்முகம், மதன்குமார், நகர செய லாளர் ஸ்ரீதர், துணைசெய லாளர் செல்வம், திருமங் கலம் நகராட்சி தலைவர் ரம்யா முத்துக்குமார், துணை தலைவர் ஆதவன் அதிய மான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News