உள்ளூர் செய்திகள்

மதுரை திருப்பாலை யாதவா கல்லூரி தேர்வு மையத்தில் நடந்த கிராம உதவியாளர் தேர்வில் பங்கேற்றவர்கள்.

22 மையங்களில் கிராம உதவியாளர் தேர்வு

Published On 2022-12-04 07:54 GMT   |   Update On 2022-12-04 07:54 GMT
  • 22 மையங்களில் கிராம உதவியாளர் தேர்வு நடந்தது.
  • விண்ணப்பதாரர் எவரும் வெளியில் செல்ல அனுமதிக்கப் படவில்லை.

மதுரை

மதுரை மாவட்டத்தில் 11 தாலுகாக்கள் உள்ளன. இங்கு 400-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலகங்கள் உள்ளன. கடந்த 3 ஆண்டுகளாக 209 கிராம உதவியாளர்கள் பணியிடம் காலியாக உள்ளது. எனவே மதுரை மாவட்டத்தில் கிராம உதவியாளர் தேர்வுக்கு, கடந்த அக்டோபர் மாதம் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து ஆண்-பெண் உள்பட இரு பாலரும் போட்டி போட்டுக்கொண்டு விண்ணப்பம் செய்தனர். நவம்பர் 7-ந் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. கிராம உதவியாளர் பணியி டங்களுக்கான எழுத்துத் திறனறித் தேர்வு இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இதற்கான ஹால் டிக்கெட்டுகள், இணைய வழி மூலம் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மதுரை மாவட்ட கிராம உதவியாளர் திறனறி தேர்வு 22 மையங்களில் நடந்தன. இதற்காக விண்ணப்ப தாரர்கள் காலை 9 மணி முதலில் தேர்வு மையத்துக்கு வரத் தொடங்கி விட்டனர்.

அங்கு அவர்களிடம் ஹால் டிக்கெட் பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர்கள் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். தேர்வு காலை 10 மணி முதல் 11 மணி வரை தேர்வு நடந்தது.

இதில் முதல் அரை மணி நேரம் தமிழ் எழுத்து திறனறி தேர்வும், அடுத்த அரை மணி நேரம் ஆங்கில எழுத்து திறனறித் தேர்வும் உள்ளடக்கியதாக இருந்தது. மதுரை மாவட்ட கிராம உதவியாளர் தேர்வு மையங்களில் காலை 9.30 மணி வரை விண்ணப்பதாரர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

அதன் பிறகு வந்தவர்கள் அனுமதிக்கப் படவில்லை. அதேபோல தேர்வு மையத்தில் இருந்து 10.50 மணிக்கு பிறகு, விண்ணப்பதாரர் எவரும் வெளியில் செல்ல அனுமதிக்கப் படவில்லை.

Tags:    

Similar News