உள்ளூர் செய்திகள்

மதுரை கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்த பெண்கள்.

பெண்களிடம் பண மோசடி செய்ய முயற்சி

Published On 2023-01-23 07:57 GMT   |   Update On 2023-01-23 07:57 GMT
  • ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை பயன்படுத்தி பெண்களிடம் பண மோசடி செய்ய முயற்சி.
  • ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை பயன்படுத்தி பெண்களிடம் பண மோசடி செய்ய முயற்சி.

மதுரை

மதுரை மாவட்டம் பூசாரிப்பட்டி அருகே மாயாண்டிபட்டியை சேர்ந்த கிராம பெண்கள் இன்று கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

எங்கள் ஊருக்கு கோமதி புரத்தை சேர்ந்த ஒரு பெண்ணும், ஆணும் வந்த னர். அவர்கள் எங்களுக்கு இலவச தையல் பயிற்சி அளிப்பதாக கூறினர். அதை நம்பி அந்த பயிற்சி யில் சேர்ந்தோம். அப்போது நாங்கள் வைத்திருந்த வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு, பான் கார்டு போன்ற ஆவணம் மற்றும் போட்டோ ஆகியவற்றை வாங்கி கொண்டனர். 45 நாட்கள் நடைபெற்ற பயிற்சியில் 40 பெண்கள் கலந்து கொண்டோம்.

பயிற்சி முடிந்ததும் எங்களது ஆவணங்களை திருப்பிதரும்படி கேட்டோம். அதனை மேலூருக்கு வந்து வாங்கி கொள்ளுமாறு கூறினார்கள். மேலும் பயிற்சி பெற்றதற்கான சான்றிதழும் தருவதாக கூறினர்.

அவர்கள் கூறியதை நம்பி சில விண்ணப்பங்களில் கையெழுத்து போட்டு கொடுத்தோம். அவர்கள் கூறியபடி மேலூருக்கு சென்றோம். அப்போது ஆவணங்களை தராமல் அவற்றை உங்கள் ஊருக்கே வந்து தருகிறோம் என்று தெரிவித்தனர்.

இந்த நிலையில் அவர்கள் எங்களது ஆவணங்களில் சில திருத்தங்களை செய்துள்ளனர். அதற்கு வந்த ஓ.டி.பி. போன்றவற்றை எங்களிடம் கேட்டு தெரிந்து கொண்டு அதில் போட்டோக்களை மாற்றி வைத்து வங்கியில் கடன் வாங்க முயற்சி செய்வது தெரியவந்தது.

இதுபற்றி நாங்கள் அவர்களிடம் கேட்டபோது, அவதூறாக பேசி மிரட்டல் விடுத்தனர். இதனால் நாங்கள் மனஉளைச்சலில் உள்ளோம். எங்களை ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட முயற்சி செய்த 2 பேர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News