உள்ளூர் செய்திகள்

சோழவந்தான் கோவிலில் திருக்கல்யாணம்

Published On 2022-11-01 12:48 IST   |   Update On 2022-11-01 12:48:00 IST
  • சோழவந்தான் அகிலாண்டேசுவரி அம்பாள் சமேத மூலநாத சுவாமி கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது.
  • இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி பாலமுருகன் உள்ளிட்ட ஆலய பணியாளர்கள் மற்றும் பிரதோஷ கமிட்டியினர் செய்திருந்தனர்.

சோழவந்தான்

சோழவந்தான் அகிலாண்டேசுவரி அம்பாள் சமேத மூலநாத சுவாமி கோவிலில் வள்ளி-தெய்வானை சமேத பாலசுப்பிரமணியருக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது. இங்கு சூரசம்கார விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கி பின்னர் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது. நேற்று திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

தென்கரை இரட்டை அக்ரகாரத்தில் இருந்து நவநீதகிருஷ்ண பெருமாள் சீர்வரிசை சுமந்து வர, நாகேசுவர சிவம் மாப்பிள்ளை வீட்டாராகவும், முகேஷ் சிவம் பெண் வீட்டாராகவும் மாலை மாற்றி மேளதாளம் முழங்க வள்ளி-தெய்வானை சமேத முருகப்பெருமானுக்கு திருக்கல்யாண வைபவத்தை கிருஷ்ணமூர்த்தி வாத்தியார் நடத்தி வைத்தார். செந்தில் தீபாராதனை காட்டினார். கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா என்று பக்தர்கள் பக்தி பெருக்குடன் வழிபட்டனர். தொடர்ந்து மஞ்சள் கயிறு, குங்குமம் உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டு அன்னதானம் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி பாலமுருகன் உள்ளிட்ட ஆலய பணியாளர்கள் மற்றும் பிரதோஷ கமிட்டியினர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News