உள்ளூர் செய்திகள்

கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி

Published On 2023-08-11 08:28 GMT   |   Update On 2023-08-11 08:28 GMT
  • கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபடுகின்றனர்.
  • வழிப்பறி கொள்ளையர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரை

மதுரை அருகே உள்ள சிலைமான் பகுதியை சேர்ந்தவர் பழனிவேல் (39). இவர் சம்பவத்தன்று ஆரப்பாளையம் சோனையாகோவில் தோப்பு பகுதியில் நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் கத்தியை காட்டி மிரட்டில் பழனிவேலிடம் ரூ.1300-ஐ பறித்து சென்றார்.

இதுகுறித்த புகாரின் பேரில் கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் வழிப்பறியில் ஈடுபட்டது ஆரப்பாளையம் கிராஸ் ரோடு கிருஷ்ணாபாளையம் 2-வது தெருவை சேர்ந்த மாடசாமி மகன் ஆனந்த குமார் (24) என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

மதுரை மேலத்தொப்பு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்(31). இவர் சம்பவத்தன்று புதுமா காளிப்பட்டி ரோடு சந்திப்பில் நின்று கொண்டி ருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் கத்தியை காட்டி மிரட்டி செல்போன், பணத்தை பறித்து சென்றனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் தெற்குவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில் வழிப்பறியில் ஈடுபட்டது சோலை அழகுபுரம் முதல் தெரு பகவதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சேகர் மகன் உமையகுமார் என்ற பெரிய எலி (23), சோலையழகுபுரம் ஜானகி நகர் முதல் தெரு சுரேஷ்குமார் மகன் மணிகண்டன் என்ற பாட்டில் மணி (22), சோலை அழகுபுரம் பாண்டி மகன் மாரிச்செல்வம் (22) என தெரியவந்தது. 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மதுரை நகரில் அண்மை காலமாக வழிப்பறி, நகைப்பறி போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. பட்டப்ப கலிலும் தனியாக செல்லும் பெண்கள், முதியவர்களை குறிவைத்து தைரியமாக வழிப்பறியில் ஈடுபடு கின்றனர். மேலும் கத்தியை காட்டி மிரட்டு வதும் சில சமயங்களில் ஆயுதங்களால் பொதுமக்களை தாக்கு வதும் நடந்து வருகிறது. எனவே போலீசார் கூடுதல் ரோந்து சென்று வழிப்பறி கொள்ளையர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News