உள்ளூர் செய்திகள்
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மறியல்
- மதுரை விமான நிலைய சாலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மறியல் செய்தனர்.
- இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை
மதுரை விமான நிலைய நுழைவுவாயில் பகுதியில் அம்பேத்கர் சிலை உள்ளது. இன்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு பெருங் குடி பகுதியில் உள்ள விடு தலை சிறுத்தை கட்சியினர் ஊர்வலமாக மாலை அணி விக்க வந்தனர்.
அவர்கள் செல்லும் பாதையில் பிரச்சினை ஏற்படலாம் என கருதிய போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி மாற்று பாதையில் செல்லுங்கள் என கூறினர். ஆனால் இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மறுப்பு தெரிவித்து திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த டி.எஸ்.பி. வசந்த குமார் தலைமையில் 20 -க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை ஏற்று விடுதலை சிறுத்தை கட்சியினர் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.