உள்ளூர் செய்திகள்

தனியார் நிறுவனங்களில் இளைஞர்களுக்கு திறன் பயிற்சி

Published On 2023-05-16 08:30 GMT   |   Update On 2023-05-16 08:30 GMT
  • தனியார் நிறுவனங்களில் இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளிக்கப்படுகிறது.
  • கலெக்டர் அனீஷ்சேகர் தெரிவித்துள்ளார்.

மதுரை

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சென்னை வாயிலாக மதுரை மாவட்டத்தில் ஆண்டுக்கு ரூ. 50 கோடிக்கு மேல் உற்பத்தி செய்து ஈட்டும் தனியார் தொழில் நிறுவனங்களில் இளைஞர்களுக்கு திறன் பயிற்சி திட்டம் வழங்க இணையதளம் வாயிலாக GREEN CHANNEL PARTNER REGISTRATION செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இந்த பயிற்சி வழங்கும் தனியார் தொழில் நிறுவனங்கள் தங்களின் தொழில் நிறுவனத்திற்கு தேவையான திறன் பயிற்சிகளை தாங்களே வழங்கி மேற்படி பயிற்சி பெற்றவர்களுக்கு அந்த நிறுவனத்தில் திறன்மிகு பணியாளர்கள் பணிபுரியமர்த்த வாய்ப்பும் கிடைக்கிறது.

பயிற்சியின் போது பயிற்சி வழங்கும் நிறுவனத்திற்கு பயிற்சி கட்டணமும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தால் வழங்கப்படுவதால் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேலும், கூடுதல் விபரங்களுக்கு உதவி இயக்குநர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், மூன்று மாவடி, மதுரை-7 என்ற முகவரியில் இயங்கி வரும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலக அலைபேசி எண் (94990 55748)-க்கு தொடர்பு கொண்டு தகவலை பெற்றுக்கொள்ளலாம். மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News