உள்ளூர் செய்திகள்

சோழவந்தான்: கூடுதல் பஸ்கள் இயக்க மாணவிகள் வலியுறுத்தல்

Published On 2023-05-09 06:09 GMT   |   Update On 2023-05-09 06:09 GMT
  • சோழவந்தான் பகுதிக்கு கூடுதல் பஸ்களை இயக்குமாறு மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  • வெங்கடேசன் எம்.எல்.ஏ. தனி கவனம் செலுத்தி மாணவிகளுக்கு உதவ வேண்டும் என்றனர்.

சோழவந்தான்

மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கருப்பட்டி, இரும்பாடி, நாச்சிகுளம், மன்னாடிமங்கலம், முள்ளிப்பள்ளம், தென்கரை, குருவித்துறை, திருவேடகம், மேலக்கால், நெடுங்குளம், தச்சம்பத்து, விக்கிரமங்கலம் ஆகிய பகுதிகளில் இருந்து பட்டப்படிப்பிற்காகவும், தொழில் சார்ந்த படிப்பு களுக்காகவும் மதுரை நகர் பகுதிகளுக்கு தினசரி 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் சென்று வருகின்றனர்.

இவர்கள் கல்லூரி முடிந்து மாலை 5மணிக்கு மேல் வீடு திரும்புவதற்கு பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து போதுமான பஸ்வசதி இல்லாததால் மிகவும் சிரமப்படுவதாக தெரிவிக்கின்றனர். குறிப்பாக மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து மாலை 6 மணி முதல் 7.30மணி வரை சோழவந்தான், விக்கிரமங்கலம் பகுதி களுக்கு எந்த ஒரு பஸ்சும் இல்லாததால் தினசரி சுமார் 2மணி நேரம் பெரியார் பஸ் நிலையத்தில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.

எனவே வீட்டிற்கு செல்வதில் மேலும் தாமதம் ஏற்படுவதாகவும், ஆகை யால் மாவட்ட நிர்வாகமும், போக்குவரத்து துறையும் மாணவிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மாலை நேரத்தில் பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து சோழவந்தான் மற்றும் விக்கிரமங்கலம் பகுதிக ளுக்கு கூடுதல் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சோழவந்தான் எம்.எல்.ஏ. வெங்கடேசன் இதில் தனி கவனம் செலுத்தி மாணவிகளுக்கு உதவ வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News