உள்ளூர் செய்திகள்

உரிமம் பெறாத கழிவு நீர் அகற்றும் வாகனங்கள் பறிமுதல்

Published On 2023-04-11 08:44 GMT   |   Update On 2023-04-11 08:44 GMT
  • மேலூர் நகராட்சி பகுதியில் உரிமம் பெறாத கழிவு நீர் அகற்றும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என ஆணையாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
  • வாகனங்களை பறிமுதல் செய்வதோடு அவர்கள் மீது வழக்கு தொடரப்படும்

மேலூர்

மேலூர் நகராட்சி பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் தனியார் கட்டிடங்களில் உள்ள மனித கழிவு நீர் தொட்டிகளில் இருந்து கழிவுகளை அகற்றும் வாகனங்கள் உடனடியாக உரிமம் பெற வேண்டும் என்று நகராட்சி ஆணையாளர் ஆறுமுகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளார்.

கழிவுநீர் அகற்றும் வாகனங்களில் அரசு விதிப்படி போதிய பாதுகாப்பு அமைப்புகள் செய்திருக்க வேண்டும்.தகுந்த ஆவணங்களுடன் வாகன உரிமையாளர்கள் ரூ.2 ஆயிரம் கட்டணத்துடன் நகராட்சியில் விண்ணப்பித்து 2 ஆண்டுகள் செல்லத்தக்க உரிமத்தை பெற்றுக் கொள்ளலாம்.

அவ்வாறு உரிமம் பெறாத கழிவுநீர் அகற்றும் வாகனங்களை பறிமுதல் செய்வதோடு அவர்கள் மீது வழக்கும் தொடரப்படும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News