உள்ளூர் செய்திகள்

மோட்டார் சைக்கிளில் வந்த இருவருக்கு அரிவாள் வெட்டு

Published On 2023-10-10 13:55 IST   |   Update On 2023-10-10 13:55:00 IST
  • மோட்டார் சைக்கிளில் வந்த இருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
  • இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை

திருமங்கலம் அருகே உள்ள மொச்சிகுளம் பகுதியை சேர்ந்தவர் சஞ்சய் காந்தி(வயது44). இவரது உறவினர் சூரியா(33). கடந்த 2002-ம் ஆண்டு அந்த பகுதியில் கோவில் திருவிழாவின்போது இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பான வழக்கில் ஆஜராவதற்காக மதுரைக்கு பாரபத்தி நான்கு வழிச்சாலையில் வந்து கொண்டிருந்தனர்.

அங்குள்ள கியாஸ் கம்பெனி அருகே பின்னால் வேகமாக வந்த ஒரு கார், மோட்டார் சைக்கிளை முந்தி அவர்களை வழிமறித்து நின்றது. அதில் இருந்து ஆயுதங்களுடன் இறங்கிய 5 பேர் கும்பல் அவர்கள் இருவரையும் சரமாரியாக வெட்டி விட்டு கண் இமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பி சென்றது.

இதில் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த கூடக்கோவில் போலீசார் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த வாலி பர்களை மீட்டு ஆஸ்பத்தி ரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் கோவில் திருவிழாவில் நடந்த மோதலில் ஏற்பட்ட முன்விரோதத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக தெரிய வருகிறது.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News