கத்தி முனையில் வழிப்பறி; 3 வாலிபர்கள் கைது
- கத்தி முனையில் வழிப்பறி செய்யப்பட்டது.
- போலீசார் 3 வாலிபர்களை கைது செய்தனர்.
மதுரை
செல்லூர் சத்தியமூர்த்தி நகர் 5-வது தெருவை சேர்ந்தவர் அபூபக்கர் (வயது45). இவர் செல்லூர் 50 அடி ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அவரை 3 வாலிபர்கள் வழி மறித்த னர். அவர்கள் கத்தியை காட்டி மிரட்டி அபூபக்கரிடம் இருந்து ரூ.1,500-ஐ பறித்துக்கொண்டு தப்பினர்.
இந்த சம்பவம் குறித்து செல்லூர் போலீசில் அபூபக்கர் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரிடம் வழிப்பறி செய்த நபர்கள் குறித்து விசாரணை நடத்தி தேடி வந்தனர்.
இந்த நிலையில் வழிப்பறி செய்த வாலிபர்கள் செல்லூர் நந்தவனம் ஈ.வே.ரா. பெரியார் தெருவை சேர்ந்த அய்யாவு மகன் கர்ணன், செல்லூர் மண வாளன் நகர் 2-வது தெருவை சேர்ந்த முருகன் மகன் மணிகண்டன், மூர்த்தி என்பது தெரியவந்தது. இதில் கர்ணணையும் மணிகண்டனையும் போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மூர்த்தியை தேடி வருகின்றனர்.
செல்போன்கள் திருட்டு
சிவகங்கை மாவட்டம் அம்பலத்தாடி போஸ்ட் மான்குடியை சேர்ந்தவர் சேதுராமன் மகன் சூரிய பாண்டி(20). இவர் தல்லா குளம் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் தேர்வு எழுத சென்றார். அப்போது அவரது பையில் அவருடைய செல்போன் மற்றும் நண்பர்களின் 8 செல்போன் களை வைத்துவிட்டு தேர்வு மையத்திற்குள் சென்றார்.
பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது பையில் வைத்திருந்த 9 செல்போன் கள் திருடப்பட்டிருந்தன. இதுகுறித்து அவர் தல்லா குளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு காமிரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில் அதே கல்லூரியைச் சேர்ந்த 3 மாணவர்கள் சேதுராமன் பையில் இருந்து செல் போன்களை திருடி சென்றது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 9 செல்போன்களை பறிமுதல் செய்த போலீசார், 3 பேரையும் கைது செய்தனர்.