உள்ளூர் செய்திகள்

மக்கள் தொடர்பு முகாமில் கலெக்டர் சங்கீதா நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மக்கள் தொடர்பு முகாம் கலெக்டர் பங்கேற்பு

Published On 2023-08-25 08:13 GMT   |   Update On 2023-08-25 08:13 GMT
  • மக்கள் தொடர்பு முகாம் கலெக்டர் பங்கேற்றார்.
  • அரசு மானியத்துடன் கூடிய பல்வேறு கடனுதவி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

மதுரை

மதுரை மாவட்டம் கள்ளிக்குடி வட்டம் பேய்குளம் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. இதில் கலெக்டர் சங்கீதா கலந்து கொண்டு பல்வேறு துறைகளின் சார்பில் 250 பயனாளி களுக்கு ரூ.1 கோடியே 1 லட்சத்து 6 ஆயிரத்து 394 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் கலெக்டர் பேசியதாவது:-

ஊரக பகுதிகளை தன்னி றைவு பெற்ற கிராமங்களாக மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பொதுமக்க ளுக்கு அத்தியாவசிய அடிப்படைத் தேவைகளான கல்வி, உணவு, சுகாதாரம் ஆகிய திட்டப்பணிகளுக்கு முக்கியத்துவம் வழங்கி பணிகள் மேற்கொள்ளப் படுகின்றன.

விவசாயிகள் தங்களது வேளாண் உற்பத்தி பொருட்களை மதிப்புக்கூட்டு செய்வதன் மூலம் அதிக வருவாய் பெறலாம். இதற்காக அரசு மானியத்துடன் கூடிய பல்வேறு கடனுதவி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் சாந்தி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் சவுந்தர்யா, மாவட்ட சமூக நல அலுவலர் பரமேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News