உள்ளூர் செய்திகள்

எஸ்.ஜி.சூர்யா கைதை கண்டித்து மறியல்:

Published On 2023-06-18 14:47 IST   |   Update On 2023-06-18 14:47:00 IST
  • எஸ்.ஜி.சூர்யா கைதை கண்டித்து மறியல் நடந்தது.
  • பா.ஜனதா மாவட்ட தலைவர் உள்பட 43 பேர் மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது.

மதுரை

பா.ஜனதா மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா மதுரை எம்.பி. வெங்கடேசன் குறித்தும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி குறித்தும் டுவிட்டரில் சில கருத்துக் களை கடந்த 7-ந்தேதி பதி விட்டிருந்தார். அந்த அவ தூறு கருத்துக்கள் தொடர் பாக நடவடிக்கை எடுக்கக் கோரி மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவ லகத்தில் உள்ள இணைய குற்ற தடுப்பு பிரிவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் புகார் கொடுத்த னர்.

அதன்பேரில் எஸ்.ஜி. சூர்யா மீது சமூக அமை திக்கு குந்தகம் விளைவித்தல், வதந்தி பரப்புதல், இருபிரிவி னருக்கு இடையே பகையை ஏற்படுத்துதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் இணைய குற்ற தடுப்பு பிரிவு போலீ சார் வழக்கு பதிந்தனர். மேலும் அவர்கள் சென்னை சென்று எஸ்.ஜி.சூர்யாவை கைது செய்தனர்.

பின்பு அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாள் நீதிமன்ற காவலில் மதுரை மத்திய சிறையில் அடைக்கப் பட்டார். எஸ்.ஜி.சூர்யா கைது செய்யப்பட்டதை அறிந்த பா.ஜனதா கட்சி யினர் நீதிபதி வீட்டு முன்பு நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் வாகனத்தை மறித்து மறிய லில் ஈடுபட்டனர்.

மறியலில் ஈடுபட்ட பா.ஜனதா மதுரை மாநகர் மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன் உள்பட 43 பேர் மீது தல்லாகுளம் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

Tags:    

Similar News