உள்ளூர் செய்திகள்
இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
- இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடந்தது.
- இந்திய மாணவர் சங்கத்தினர் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களின் சார்பில் நடத்தப்படும் தேர்வுகளை இந்தியில் நடத்தவும், மத்திய அரசின் அலுவலகங்களில் அலுவல் மொழியாக இந்தியை கொண்டு வருவதற்காக ஜனாதிபதிக்கு அனுப்பபட்ட பாராளுமன்ற குழுவின் முடிவை திரும்ப பெற கோரியும், இந்திய மாணவர் சங்கத்தினர் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தல்லாகுளம் தலைமை தபால் நிலைய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தி திணிப்புக்கு எதிராக வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி கண்டன கோஷங்களை எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இது குறித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் மணிகண்டன் கூறுகையில், மத்திய அரசின் இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம் தொடரும் என்றார்.