உள்ளூர் செய்திகள்

கூட்டத்தில் கவிஞர் சினேகன் பேசியபோது எடுத்தபடம். 

பாராளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் வாகை சூடும்-சினேகன்

Published On 2023-03-28 14:39 IST   |   Update On 2023-03-28 14:39:00 IST
  • பாராளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் வாகை சூடும் என்று மதுரையில் கவிஞர் சினேகன் பேசினார்.
  • 6-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக் கூட்டம், மதுரை பெத்தானியாபுரத்தில் நடந்தது.

மதுரை

மக்கள் நீதி மய்யம் கட்சியின் 6-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக் கூட்டம், மதுரை பெத்தானியாபுரத்தில் நடந்தது. இதில் மாநிலத் துணைத்தலைவர்கள் ஏ.ஜி. மவுரியா, தங்க வேல், நற்பணி இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் நாகராஜ், மாநில விவசாய அணி அமைப்பாளர் மயில்சாமி, இளைஞரணி மாநில செயலாளர் கவிஞர் சினேகன், மண்டல செயலாளர் அழகர், மாவட்ட செய லாளர்கள் மணி, கதிரேசன், சரவணன், மண்டல அமைப்பாளர்கள் முத்துகிருஷ் ணன், நாகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கவிஞர் சினேகன் பேசியதாவது:-

தமிழக அரசியலின் தரத்தை சர்வதேச அளவில் உயர்த்தும் முயற்சியில் கமலஹாசன் ஈடுபட்டு வருகிறார். இதற்கான பணிகளில் நாங்கள் கடந்த 6 ஆண்டு களாக நெருப்பாற்றை நீந்தி கடந்து வந்து உள்ளோம். தமிழகத்தில் இன்றைக்கு மக்கள் நீதி மய்யம் அசைக்க முடியாத சக்தியாக விளங்கி வருகிறது. அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தேச ஒற்றுமைக்காக பாதயாத்திரை சென்றார். அப்போது அவருக்கு கூட்டணி கட்சிகளே கை கொடுக்க யோசித்தது.

அந்த நிலையில் தலைவர் கமலஹாசன் தாமாகவே முன்வந்து ஆதரவு கொடுத்தார். புது டெல்லி பாதயாத்திரையில் உடன் ஒன்றாக கலந்து கொண்டார். ராகுல் காந்தியின் எம்.பி பதவி இன்றைக்கு பறிக்கப்பட்டு உள்ளது.

இது ஜனநாயகத்தின் மீது விழுந்த பேரிடி ஆகும். இந்தியாவின் எந்த ஒரு பகுதியிலும் ஜனநாயகத்துக்கு ஆபத்து வந்தால் மக்கள் நீதி மய்யம் தான் முதலாவதாக குரல் கொடுக்கும்.

அந்த வகையில் எங்கள் தலைவர் கமலஹாசன் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வருகிற பாராளுமன்ற பொது தேர்தலில் மக்கள் நீதி மய்யம் வெற்றி வாகை சூடும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News