மதுரை பெத்தானியாபுரத்தில் அ.தி.மு.க. அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில் மாவட்ட செயலாளர் சக்திவிநாயகர்பாண்டியன் தலைமையில் நடைபெற்ற மேதின விழா பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார்.
உண்மையை உரக்க சொன்னதற்காக அவரை மக்கள் பாராட்ட வேண்டும்
- உண்மையை உரக்க சொன்னதற்காக அவரை மக்கள் பாராட்ட வேண்டும்
- முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார்.
மதுரை
மதுரை பெத்தானியா புரம் பகுதியில் மதுரை மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில் மாவட்ட செயலாளர் சக்திவிநாயகர் பாண்டியன் தலைமையில் மே தின பொதுக்கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளர், மாநகர் மாவட்ட செய லா ளர், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டு பேசிய தாவது:-
ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காக பாடுபடுகின்ற ஒரே இயக்கம் அ.தி.மு.க. இதனால்தான் இப்போது புதிதாக லட்சக்கணக்கான உறுப்பினர்கள் இந்த இயக்கத்தில் தங்களை ஆர்வத்துடன் இணைத்து வருகிறார்கள். ஆனால் தி.மு.க. ஆட்சியில் இருக்கும் போது ஒரு பேச்சு, எதிர்க்கட்சியாக இருக்கும் போது வேற பேச்சு.
ரஜினிகாந்த் படம் போல் மீசை வச்ச ரஜினி, மீசை இல்லாத ரஜினி என்பது போல் தி.மு.க. செயல்படும். எதிர்க்கட்சியாக இருக்கும் போது மக்கள் மீது அக்கறை உள்ளவர்கள் போல பேசு வார்கள். ஆளுங்கட்சியாக இருக்கும் போது அப்படியே மாறிவிடுவார்கள். முதல்வருக்கு உழைப்பவர் களின் கஷ்டம் தெரியுமா? நோகாமல் முதலமைச்சர் பதவி வாங்கி விட்டார். அவருக்கு தொழிலாளு ருடைய வலி எப்படி தெரியும்?
12 மணி நேர வேலை சட்ட மசோதாவை கொண்டு வந்தவர் மு.க.ஸ்டாலின்.தி.மு.க. கூட்டணி கட்சிகளே இந்த சட்ட மசோதாவை எதிர்த்து போராட்டம் நடத்திய பிறகு அதனை வாபஸ் வாங்கியுள்ளார். நிறுத்தி வைக்கிறேன் என்று சொல்லிய முதல்வர் இப்போது வாபஸ் பெற்று விட்டதாக கூறியுள்ளார்.
உழைக்கும் தொழி லாளர் களை ஏமாற்று வதற்காக சிவப்பு சட்டை அணிந்து மே தின கூட்டத்திற்கு வருகிறார். தொழி லாளர் களுக்கு எதுவும் செய்யாமல் கம்யூனிஸ்டுகள் தி.மு.க. வுடன் ஒட்டிக்கொள் கிறார்கள். எதற்கு? எல்லாம் பணத்திற்காகதான். கடந்த தேர்தலுக்கு 25 கோடி ரூபாய் பெற்றவர்கள், அடுத்த முறை 50 கோடி ரூபாய் எதிர் பார்த்து தான் தி.மு.க.விடம் அடிபணிந்து சேவகம் செய்கிறார்கள்.
பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் திரைப்படத்தை விட நிதியமைச்சர் பி.டி.ஆர் தியாகராஜன் பேசிய ஊழல் ஆடியோ தான் தற்போது ஹைலைட்டாக உள்ளது.உதயநிதியும்,சபரீசனும் 31ஆயிரம் கோடி ரூபாய் குவித்துள்ளதாக நம்ம நிதியமைச்சர் தெளிவாக பேசியுள்ளார். அவர் மதுரைக்காரர், வீரமானவர், உண்மையை உரக்க சொன்ன நிதி அமைச்சர் தியாக ராஜனை மக்கள் பாராட்ட வேண்டும்.
மதுரையில் கலைஞர் பெயரில் நூலகம் கட்டப்பட்டு ள்ளது. வேறெதுவும் மதுரைக்கு செய்ய வில்லை. எந்த திட்டங்களும் கொண்டுவர வில்லை. தி.மு.க. வெட்டக் கூடிய ரிப்பன் அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்களில் செயல் படுத்தப்பட்டது தான்.
கோவைக்கு, சிறப்பு நிதி ஒதுக்கிய நிதி அமைச்சர் நம்ம மதுரைக்கு ஏன் நிதி ஒதுக்கவில்லை என்று தெரிய வில்லை. இனி எப்போது தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க.விற்கு வாக்களிக்க மக்கள் தயாராக இருக்கிறார்கள். கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.விற்கு வாக்களிக்காமல் விட்டு விட்டோமே என்ற ஏக்கம் தமிழக மக்கள் மனதில் ஏற்பட்டுள்ளது. எனவே எப்போது தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும். மக்கள் விரோத ஆட்சி நடத்தும் திமுகவை பாட்டாளி தொழிலாளர் வர்க்கம் வீட்டுக்கு அனுப்பும் பணியை நிச்சயம் செய்யும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் நிர்வாகிகள் வில்லாபுரம் ராஜா, எம்.எஸ்.பாண்டியன், திரவியம், அண்ணாதுரை, பரவை ராஜா, அண்ணாநகர் ரவிச்சந்திரன், ராமச்சந்திரன், மல்லன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.