உள்ளூர் செய்திகள்

மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம்

Published On 2023-01-05 15:13 IST   |   Update On 2023-01-05 15:13:00 IST
  • மாடுகளின் உரிமையாளர்களுக்கு ஒரு ஆண்டில் ரூ5.45 லட்சம் மாநகராட்சி நிர்வாகம் அபராதம் விதித்தது.
  • சாலைகளில் மாடுகள் சுற்றி திரிவதால் பொது மக்களுக்கும் போக்கு வரத்துக்கும் இடையூறாக உள்ளது.

மதுரை

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு சாலைகளில் மாடுகள் சுற்றி திரிவதால் பொது மக்களுக்கும் போக்கு வரத்துக்கும் இடையூறாக உள்ளது. இதனால் அதிகளவில் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.

மாநகராட்சியின் மூலமாக அவ்வப்போது மாடுகளின் உரிமையாளர்களுக்கு மாடுகளை சாலைகளில் விடுவதை தவிர்க்க முறையாக எச்சரிக்கை செய்யப்பட்டும் வருகிறது. மேலும் மதுரை மாநகராட்சி மற்றும் புளுகிராஸ் அமைப்பின் மூலமாக தகுதி வாய்ந்த மாடிபிடி வீரர்களை கொண்டு குழு அமைக்கப்பட்டு சாலைகளில் மாடுகளை விடும் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை சுமார் 364 மாடுகள் பிடிக்கப்பட்டு மொத்தம் ரூ.5 லட்சத்து 45 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சி பகுதிகளில் மாடுகள் வளர்ப்பவர்கள் தங்களு டைய சொந்த இடத்தில் வைத்து மாடுகளை பராமரிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

மேலும் பொது மக்களுக்கும் மற்றும் போக்குவரத்திற்கும் இடையூறாக சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகள் பிடிக்கப்பட்டு தொடர்ந்து அபராதம் விதிக்கப்படும் என்று மதுரை மாநகராட்சியின் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News