உள்ளூர் செய்திகள்

பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள்

Published On 2023-06-22 08:15 GMT   |   Update On 2023-06-22 08:15 GMT
  • மதுரை மாவட்டத்தில் பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார்.
  • சிகிச்சை ஆலோசனைகள் இலவசமாக வழங்கப்படும்.

மதுரை

முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை சிறப்பிக்கும் வகையில் மாவட்டந்தோறும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளது.

அதன்படி மதுரை மாவட்டத்தில் மாநகராட்சி பகுதியில் 2 சிறப்பு பன்னோக்கு மருத்துவ முகாம்கள், ஊரகப்பகு தியில் 4 சிறப்பு பன்னோக்கு மருத்துவ முகாம்களும் நடத்த திட்டமிடப் பட்டு உள்ளது. இந்த முகாம்கள் வருகிற 24-ந்தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.

மாநகராட்சி பகுதியில் பொன்னகரம், வெள்ளி வீதியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், கே.கே.நகர், அருள்மலர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும், ஊரக பகுதியில் மதுரை கிழக்கு வட்டாரம் சக்கிமங்கலம் மீனாட்சி நகர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, மதுரை மேற்கு வட்டாரம் ஊமச்சிக்குளம் அரசு உயர்நிலைப்பள்ளி, அலங்காநல்லுார் வட்டாரம் வெள்ளயம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, வாடிப்பட்டி வட்டாரம் அய்யப்பநாயக்கன்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி ஆகிய இடங்களிலும் நடை பெற உள்ளது.

முகாம்களில் தாய்சேய் நலம், தொற்றாநோய், நோய்களுக்கான பரிசோதனையான இரத்த அழுத்த பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, எக்கோ, மற்றும் இசிஜி பெண்களுக்கான மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பபை வாய் புற்றுநோய் பரிசோதனைகளுடன் முழு ரத்த பரிசோதனையும் இலவசமாக செய்யப்படும். பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, இருதய மருத்துவம், மகளிர் மருத்துவம், கண், காது, மூக்கு, தொண்டை மற்றும் பல் மருத்துவம், எலும்பியல் மருத்துவம், மற்றும் மனநலம் மருத்துவம் உள்ளிட்ட பன்னோக்கு மருத்துவ சிகிச்சைகள் மற்றும் ஆலோ சனைகள் சிறப்பு மருத்து வர்களால் இலவசமாக வழங்கப்படும். இதனுடன் சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேத சிகிச்சை ஆலோ சனைகளும் இலவசமாக வழங்கப்படும்.

மேற்கண்ட முகாம்களில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படு கிறார்கள்.

மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News