உள்ளூர் செய்திகள்
- மதுரை அருகே கள் விற்ற மூதாட்டி கைது செய்யப்பட்டார்.
- அங்கு சோதனையிட்டதில் 30 லிட்டர் கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள பி.பி.நத்தம் பகுதியில் கள் விற்பனை நடைபெறுவதாக திருமங்கலம் தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் அந்தப்பகுதியில் ரோந்து சென்று கண்காணித்தனர். அப்போது அங்கு பதநீர் விற்றுக்கொண்டிருந்த ஒரு மூதாட்டியிடம் விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். இதையடுத்து அங்கு சோதனையிட்டதில் 30 லிட்டர் கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் விசாரணையில், அவர் பேரையூர் அருகே உள்ள மேலப்பட்டியை சேர்ந்த ராஜகுருவின் மனைவி ராஜலட்சுமி(வயது60) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.