உள்ளூர் செய்திகள்

கீழக்கரையில் நகராட்சி கூட்டம் தலைவர் செஹானாஸ் ஆபிதா தலைமையில் நடைபெற்றது. 

ரூ.2,883 கோடி மதிப்பில் புதிய குடிநீர் திட்டம்

Published On 2023-01-06 14:16 IST   |   Update On 2023-01-06 14:17:00 IST
  • ரூ.2,883 கோடி மதிப்பில் புதிய குடிநீர் திட்டத்துக்கு முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நடந்தது.
  • அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்கப்பணம் ரூ.1000 வழங்க உத்தர விட்டுள்ளார்.

கீழக்கரை

கீழக்கரை நகராட்சி கூட்டம் நகராட்சி தலைவர் செஹானாஸ் ஆபிதா தலைமையில், துணைத்தலைவர் வக்கீல் ஹமீது சுல்தான், நகராட்சி கமிஷனர் செல்வராஜ் முன்னிலையில் நடந்தது.

கூட்டத்தில் ராமநாதபுரம் மாவட்ட மக்களின் குடிநீருக்காக ரூ. 2,883 கோடி மதிப்பீட்டில் புதிய கூட்டு குடிநீர் திட்டத்தினை செயல்படுத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். இதேபோல் அனைத்து அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்கப்பணம் ரூ.1000 வழங்க உத்தர விட்டுள்ளார். இதற்கு முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பின்னர் கூட்டத்தில் நடந்த விவாதங்கள் வருமாறு:- தலைவர் செஹானாஸ் ஆபிதா:- நகராட்சி பகுதியில் நிலவும் நிறை, குறைகளை நேரடியாக நகராட்சி அலுவலகத்திற்கு வந்து தெரிவிக்க வேண்டும். இந்த வழிமுறையை கடைபிடிக்காமல் வலைத்த ளங்களில் நகராட்சி தலைவர் மற்றும் நகராட்சி கமிஷனர், அலுவலர்கள் மீது தனிப்பட்ட முறையில் தரக்குறைவாக பேசி வருவது கண்டிக்கத்தக்கது. உடனடியாக தனிப்பட்ட பேச்சை நிறுத்த வேண்டும்.

கவுன்சிலர் சேக் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கவுன்சிலர் முகமது ஹாஜா சுகைபு:- கீழக்கரை பகுதியில் போக்குவரத்து நெரிசல் உள்ளதால் அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் வெளியேறுவதில் சிரமம் ஏற்படுகிறது. இதன் காரணமாக அரசு மருத்து வமனையில் புதிய பாதை ஏற்படுத்த மருத்துவ நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்ய வேண்டும்.

1- வது வார்டு பாதுஷா: கீழக்கரை நகராட்சியாக தரம் உயர்த்திய பிறகும் கீழக்கரை கோரிக்கைகளை இதுவரையிலும் நிறை வேற்றப்படாததால் வருகின்ற நகர் சபா கூட்டத்திற்கு கலந்து கொள்ள போவதில்லை என்று கூறினார்.

இதேபோல் கவுன்சி லர்கள் முகம்மது காசிம், பவித்ரா, சப்ராஸ் நவாஸ், நசுருதீன் உள்ளிட்டோர் சாக்கடை வசதி, அடிப்படை வசதிகள், வரிவசூல் குறித்து பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.

கூட்டத்தில் நகராட்சி முன்னாள் வாகன ஓட்டுநர் அய்யப்பனுக்கு இரங்கல் தெரிவித்து மவுன அஞ்சலி செலுத்தினர். இதில் நகராட்சி பொறியாளர் அருள், துப்புரவு ஆய்வாளர் பரக்கத்துல்லா, நகராட்சி மேற்பார்வையாளர் சாம்பசிவம், மேலாளர் தமிழ்ச்செல்வன், இளநில உதவியாளர் உதயகுமார் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News