உள்ளூர் செய்திகள்

முத்துராமலிங்க தேவர் தங்க கவசம் மதுரை வங்கியில் இன்று ஒப்படைப்பு

Published On 2022-11-01 09:22 GMT   |   Update On 2022-11-01 09:22 GMT
  • முத்துராமலிங்க தேவர் தங்க கவசம் மதுரை வங்கியில் இன்று ஒப்படைக்கப்பட்டது.
  • இதனைத் தொடர்ந்து அங்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்ட இருந்தது.

மதுரை

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் தேவர் ஜெயந்தி கொண்டா டப்படுவது வழக்கம்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தேவர் ஜெயந்தி அன்று உருவச்சிலைக்கு அணிவிப்பதற்காக, 13 கிலோ எடை உடைய தங்க கவசத்தை வழங்கினார். இது தேவர் ஜெயந்தி தவிர மற்ற நாட்களில், மதுரை அண்ணாநகர் வங்கி லாக்கரில் பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தி விழாவுக்கு தங்க கவசம் வழங்குவதில் இ.பி.எஸ்.- ஓ.பி.எஸ். அணிகளுக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டது. எனவே பசும்பொன் முத்து ராமலிங்கத் தேவருக்கான தங்க கவசத்தை, ராமநாதபுரம் மாவட்ட டி.ஆர்.ஓ. வசம் ஒப்படைக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தர விட்டது.

இதன்படி மதுரை அண்ணாநகர் வங்கியில் இருந்து அதிகாரிகள் தங்க கவசத்தை பெற்று, பசும்பொன் கிராமத்தில் உள்ள உருவச்சிலைக்கு அணிவித்தனர். இதனைத் தொடர்ந்து அங்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்ட இருந்தது.

இந்த நிலையில் பசும்பொன் கிராமத்தில் தேவர் ஜெயந்தி விழா நிறைவடைந்தது. இதையடுத்து ராமநாதபுரம் மாவட்ட டி.ஆர்.ஓ. காமாட்சி தலைமையில் அதிகாரிகள் இன்று காலை தங்க கவசத்துடன் மதுரைக்கு வந்தனர். அவர்கள் அண்ணாநகர் வங்கியில் மதுரை மாவட்ட டி.ஆர்.ஓ. சக்தி வேல் முன்னிலையில் முன்னிலையில் தங்க கவசத்தை ஒப்படைத்தனர்.

Tags:    

Similar News