உள்ளூர் செய்திகள்

விழாவில் எடப்பாடி பழனிசாமிக்கு முன்னாள் எம்.எல்.ஏ. சரவணன் செங்கோல் வழங்கினார். அருகில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, உதயகுமார் மற்றும் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. உள்ளனர். 

5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்

Published On 2023-02-11 08:58 GMT   |   Update On 2023-02-11 08:58 GMT
  • முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் சரவணன் தலைமையில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.
  • மதுரை மக்களுக்கு கொண்டுவரப்பட்ட ரூ‌. 1,296 கோடி மதிப்பிலான முல்லைப் பெரியாறு குடிநீர் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

மதுரை

தூத்துக்குடியில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு விட்டு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மதுரை வழியாக வந்தார். அப்போது மதுரை வலையங்குளம் ரிங் ரோட்டில் முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் சரவணன் ஏற்பாட்டில் சிலம்பம், கரகாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மூலம் 500-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் மேளதாளம் முழங்க எடப்பாடி பழனிச்சாமிக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

அதனைத் தொடர்ந்து டாக்டர் சரவணன் பூங்கொத்து கொடுத்து எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்றார்.

பின்னர் அங்கு நடந்த விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் சரவணன் தலைமையில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் தங்களை அ.தி.மு.க.வில் இணைத்துக் கொண்டனர். அப்போது டாக்டர் சரவ ணன், பழனிச்சாமிக்கு செங்கோல் கொடுத்தார்.

விழாவில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

தி.மு.க. தேர்தல் வாக்கு றுதியை 85 சதவீதம் நிறைவேற்றி விட்டதாக பொய் கூறி வருகிறார்கள். ஆனால் 10 சதவீத வாக்குறுதியை அவர்கள் நிறைவேற்றவில்லை.

ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி தி.மு.க. அரசு தான். இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழகம் இருப்பதாக மு.க. ஸ்டாலின் கூறுகிறார். ஆனால் உண்மையில் தமிழகம் ஊழலில் தான் முதன்மையாக இருக்கிறது.

அ.தி.மு.க. ஆட்சியின் போது கொண்டு வந்த பல திட்டங்களை தி.மு.க.வினர் நிறுத்திவிட்டார்கள். மதுரை மக்களுக்கு கொண்டுவரப்பட்ட ரூ. 1,296 கோடி மதிப்பிலான முல்லைப் பெரியாறு குடிநீர் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

தி.மு.க. கூறிய எந்த தேர்தல் அறிக்கை வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை மக்களுக்கு பட்டை நாமம் போட்டு விட்டார்கள்.

இவ்வாறு அவர் பேசி னார்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, உதயகுமார், மற்றும் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News