உள்ளூர் செய்திகள்

நவீன சிறுவர் பூங்காவினை எம்.எல்.ஏ வெங்கடேசன் திறந்து வைத்தார்.

பாலமேடு பேரூராட்சியில் நவீன பூங்கா, கழிப்பறை வசதி

Published On 2023-10-06 13:03 IST   |   Update On 2023-10-06 13:03:00 IST
  • பாலமேடு பேரூராட்சியில் ரூ.29.60 லட்சம் மதிப்பீட்டில் நவீன பூங்கா, கழிப்பறை வசதியை வெங்கடேசன் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்.
  • இந்த நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் சுமதி பாண்டியராஜன் தலைமை தாங்கினார்.

அலங்காநல்லூர்

மதுரை மாவட்டம் பாலமேடு பேரூராட்சி பகுதியில் உள்ள மஞ்சமலை நகரில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக சமுதாய கழிப்பறை வசதி மற்றும் பேரூராட்சி அருகே உள்ள வேளார் தெருவில் ரூ.14.60 லட்சம் மதிப்பீட்டில் நவீன சிறுவர் பூங்கா அமைக்கப் பட்டு உள்ளது.

இதனை சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் சுமதி பாண்டியராஜன் தலைமை தாங்கினார். துணை தலைவர் ராமராஜ், செயல் அலுவலர் தேவி, திமுக மாவட்ட அவை தலைவர் பால சுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர்கள் தன்ராஜ், பரந்தாமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்தையன், நகர் செயலாளர்கள் மனோகரவேல் பாண்டியன், ரகுபதி, அலங்காநல்லூர் பேரூராட்சி சேர்மன் ரேணுகா ஈஸ்வரி கோவிந்த ராஜ், துணை சேர்மன் சுவாமிநாதன், ஒன்றிய சேர்மன் பஞ்சு அழகு, ஒன்றிய துணை சேர்மன் சங்கீதா மணிமாறன், விளையாட்டு மேம்பாட்டு அணி பிரதாப், இளைஞரணி சந்தனகருப்பு, அணி அமைப்பாளர்கள் யோகேஷ், தவசதிஷ், ராகுல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News