உள்ளூர் செய்திகள்

ஆவின் நிறுவனத்தில் அமைச்சர் நாசர் திடீர் ஆய்வு செய்தார். அருகில் கலெக்டர் அனீஷ்சேகர், மேலாண் இயக்குநர் சுப்பையன் உள்ளனர்.

மதுரை ஆவின் நிறுவனத்தில் அமைச்சர் திடீர் ஆய்வு

Published On 2023-02-26 09:00 GMT   |   Update On 2023-02-26 09:00 GMT
  • மதுரை ஆவின் நிறுவனத்தில் அமைச்சர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
  • இதன் காரணமாக ஆவின் பாலை முகவர்களுக்கு உரிய நேரத்தில் அனுப்ப முடியவில்லை.

மதுரை

மதுரை அண்ணாநகரில் ஆவின் பால் நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு ஏஜெண்டுகள் மூலம் பொது மக்களுக்கு பால் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிறுவனத்தில் இருந்து வழக்கமாக பால் வாகனங்கள் அதிகாலை 3 மணிக்கு கிளம்பி விடும். கடந்த 10 நாட்களாக, காலை 8 மணிக்கு செல்வதாக தெரிகிறது. பொதுமக்களுக்கு உரிய நேரத்தில் ஆவின் பால் கிடைக்கவில்லை. முகவர்கள் கால தாமதமாக வந்த ஆவின் பால் வாகனங்களை திருப்பி அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மதுரை மாவட்டத்தில் தினமும் சுமார் 1 லட்சம் லிட்டர் பால் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்திற்கு 1.60 லட்சம் லிட்டர் பால் தேவை. ஆனால் 1.35 லட்சம் லிட்டர் பால் மட்டுமே கிடைக்கிறது. ஆவின் பால் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. ஆவின் நிறுவனத்தில் பால்களை அடுக்கி வைப்பது, பிரித்து வைப்பது உள்ளிட்ட பணிகளில் நிரந்தர ஊழியர்களுடன் தற்காலிக பணியாளர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.

இங்கு ஆட்கள் பற்றாக்குறை உள்ளது. இதன் காரணமாக ஆவின் பாலை முகவர்களுக்கு உரிய நேரத்தில் அனுப்ப முடியவில்லை. மதுரை ஆவின் பால் நிறுவனத்தில் ஏற்பட்டு உள்ள பால் தட்டுப்பாடு, ஊழியர் பற்றாக்குறை மற்றும் குளறுபடிகள் மாநில அளவில் பிரதிபலித்தது.

இந்த நிலையில் அமைச்சர் நாசர் இன்று மதுரை வந்தார். அண்ணாநகர் ஆவின் நிறுவனத்துக்கு சென்று திடீர் சோதனை நடத்தினார். அமைச்சருடன் கலெக்டர் அனீஷ்சேகர், மேலாண் இயக்குநர் சுப்பையன் ஆகியோரும் உடனிருந்தனர்.

Tags:    

Similar News