உள்ளூர் செய்திகள்

வேளாண் பட்டதாரிகளுக்கு கடனுதவி

Published On 2022-10-13 08:14 GMT   |   Update On 2022-10-13 08:14 GMT
  • கொட்டாம்பட்டி பகுதியில் வேளாண் பட்டதாரிகளுக்கு கடனுதவி வழங்கப்பட்டது.
  • மேலும் விபரங்களுக்கு அருகில் உள்ள வேளாண் அலுவலத்தை தொடர்பு கொள்ளலாம்.

மேலூர்

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சுபாசாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் பட்டதாரி இளைஞர்களை வேளாண் தொழில் முனை வோர்களாக மாற்ற ரூ.1 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. அதற்கு 25 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.

மானியம் பெற இளங்கலை வேளாண், தோட்டக்கலை அல்லது வேளாண் பொறியியல் பயின்றவராகவும், 21 வயதில் இருந்து 40 வயது வரை இருக்க வேண்டும். பயனாளி அரசு, தனியார் நிறுவனங்களில் பணியில் இருக்கக் கூடாது.

மூலதனத்தில் வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த தொழில் செய்ய வேண்டும். நிலம் மற்றும் தளவாடங்கள் போன்ற உள்கட்டமைப்பு செலவுகளை திட்ட மதிப்பீட்டில் சேர்க்க கூடாது.

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைப்பு திட்டத்தில் தேர்வான வலைச்சேரி பட்டி, குன்னாரம் பட்டி, மேலவளவு, 18 சுக்காம்பட்டி, பதினெட்டாங்குடி, பூதமங்கலம் கிராம த்தினருக்கு முன்னு ரிமை அளிக்கப்படும். மேலும் விபரங்களுக்கு அருகில் உள்ள வேளாண் அலுவலத்தை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News