உள்ளூர் செய்திகள்

பிரம்மாண்ட கபடி போட்டி

Update: 2022-09-27 08:15 GMT
  • மதுரையில் இன்று மாலை 60 மாவட்ட வீரர்கள் பங்கேற்கும் பிரம்மாண்ட கபடி போட்டி நடக்கிறது.
  • இதில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொள்கிறார்.

மதுரை

மதுரை மாவட்ட பா.ஜ.க. விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு சார்பில் 60 மாவட்ட வீரர்கள் பங்கேற்கும் பிரம்மாண்டமான இறுதி கபடி போட்டி மதுரா கல்லூரியில் இன்று மாலை 6 மணிக்கு தொடங்குகிறது. இதில் 720 வீரர்கள் கலந்து கொண்டு விளையாடுகின்றனர்.

இந்த போட்டி இன்று முதல் வருகிற 29-ந் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. இதில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் மற்றும் மாநில நிர்வாகிகள் கருப்பு முருகானந்தம், சீனிவாசன், கதலி நரசிங்க பெருமாள், தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் கே.அண்ணாமலை, பா.ஜ.க. திறன் மேம்பாட்டு பிரிவு தலைவர் அமர்பிரசாத் ரெட்டி, துணைத்தலைவர்கள் அக்னி எம்.ராஜேஷ், பாலாஜி தங்கவேல், சிறப்பு விருந்தினர்கள் ரமணன் விஜயன், ஆதம் சிம்சியர், மாநில செயலாளர்கள் என்.ராமச்சந்திரன், டாக்டர் சுரேஷ்குமார், டி.புஷ்பநாதன், எம்.கண்ணன், ஞானமணி, தமிழ்சங்கு,டாக்டர். பப்னா ராஜ்குமார், கார்த்திக், காளிராஜ்,ஹரிகிருஷ்ணன், ரவிக்குமார், ஆயிஷா அப்துல்லா, மதுரை புறநகர் மாவட்ட தலைவர் மகாசுசீந்திரன் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

இதற்கான ஏற்பாடுகளை விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் என்.ராமச்சந்திரன் செய்திருந்தார்.

Tags:    

Similar News