உள்ளூர் செய்திகள்

இலவச மருத்துவ முகாம்

Published On 2023-04-03 13:45 IST   |   Update On 2023-04-03 13:45:00 IST
  • திருப்பரங்குன்றம் அருகே உள்ள ஹார்விபட்டியில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.
  • திருநகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சிகிச்சை பெற்றனர்.

திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றத்தை அடுத்த ஹார்விபட்டியில் எஸ்.ஆர்.வி. மக்கள் நல மன்றம், தனியார் மருத்துவமனை இணைந்து இலவச மருத்துவ முகாமை நடத்தியது. தலைவர் அய்யல் ராஜ் தலைமை தாங்கினார். கவுன்சிலர்கள் இந்திரா காந்தி, விஜயா, முன்னாள் அறங்காவலர் மகா.கணேசன், பாண்டியராஜன் முன்னிலை வகித்தனர். முன்னாள் எம்.எல்.ஏ. ராஜேந்திரன், சமூக ஆர்வலர் சண்முகசுந்தரம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தனர். டாக்டர்கள் சரவணன், ஹேமா ஆகியோர் தலைமையில் மருத்துவ பரிசோதனை நடந்தது.

திருப்பரங்குன்றம், ஹார்விபட்டி, திருநகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சிகிச்சை பெற்றனர். சங்க நிர்வாகி வேட்டையர், கெங்கபிரகாஷ், அண்ணாமலை மக்கள் நல மைய தலைவர் செல்வராஜ், அரவிந்தன், முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News