உள்ளூர் செய்திகள்

மருத்துவ கல்லூரி வளாகத்தில் கண்மாய் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

ஓமியோபதி மருத்துவ கல்லூரியை சூழ்ந்த கண்மாய் தண்ணீர்

Published On 2022-11-29 07:53 GMT   |   Update On 2022-11-29 07:53 GMT
  • திருமங்கலம் ஓமியோபதி மருத்துவ கல்லூரியில் கண்மாய் நீர் சூழ்ந்தது.
  • இந்த கல்லூரியையொட்டி மதுரை- விருதுநகர் 4 வழிச்சாலை செல்கிறது.

திருமங்கலம்

திருமங்கலம் என்.ஜி.ஓ. காலனியில் அரசு ஓமியோபதி மருத்துவ கல்லூரி- மருத்துவமனை அமைந்துள்ளது. இதில் 250 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியையொட்டி மதுரை- விருதுநகர் நான்கு வழிச்சாலை செல்கிறது. சாலை உயரம் அடைந்தததால் கல்லூரி வளாகம் தாழ்வானது. மழைக்காலத்தில் அருகே உள்ள மறவன்குளம் கண்மாய் நிரம்பி குட்டி நாயக்கனூர் கண்மாய்க்கு வரும்போது ஓமியோபதி கல்லூரி வளாகத்திற்குள் தண்ணீர் புகுந்து விடுகிறது. கடந்தாண்டு பெய்த தொடர் மழையால் ஓமியோபதி கல்லூரி வளாகம் முழுவதும் தண்ணீர் சூழ்ந்தது. மாணவ-மாணவிகளுக்கு ஆன்லைன் மூலமாக 2 மாதத்திற்கு மேல் வகுப்புகள் நடந்தன. இந்த ஆண்டும் உரப்பனூர் கண்மாய், மறவன்குளம் கண்மாய் உள்ளிட்ட திருமங்கலத்தை சுற்றியுள்ள கண்மாய்கள் நிரம்பியுள்ள நிலையில் நேற்று முன்தினம் முதல் குட்டிநாயக்கனூர் கண்மாய்க்கு தண்ணீ்ர் செல்ல தொடங்கியது.

இதனால் அரசு ஓமியோபதி கல்லூரி வளாகத்தில் கண்மாய் நீர் சூழ்ந்தது. கண்மாய் நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்தால் கடந்தாண்டு போல் கல்லூரி வளாகம் முழுவதும் தண்ணீரில் மூழ்கும் நிலை ஏற்படும். இது ஓமியோபதி மருத்துவ மாணவ- மாணவிக ளிடையேய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்தினர் கூறுகையில்,2 தினங்களாக கண்மாய்க்கு தண்ணீர் வரத்து தொடங்கி உள்ளது. நிலைமையை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். தேவைப்பட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

Tags:    

Similar News