உள்ளூர் செய்திகள்
- உசிலம்பட்டியில் சி.ஐ.டி.யு. செஞ்சட்டை பேரணி நடந்தது.
- பயணிகளின் கூட்ட நெரிசலை போக்குவதற்கு கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் விடுக்கப்பட்டன.
உசிலம்பட்டி
உசிலம்பட்டி தேவர் சிலை அருகே சி.ஐ.டி.யு. அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர் சங்கம் சார்பில் 50-வது பொன்விழா ஆண்டை முன்னிட்டு செஞ்சட்டை பேரணி நடந்தது. மாநில தலைவர் சவுந்தரராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு செல்லக்கண்ணு, மத்திய சங்கத் துணைத் தலைவர் சிவகுமார் முன்னிலை வைத்தனர். ராஜேந்திரன் கொடியேற்றினார். மாவட்டத் தலைவர் அழகர்சாமி, பொதுச் செயலாளர் கனகசுந்தர், கிளை தலைவர் பாண்டி, செயலாளர் பெருமாள், துணைச் செயலாளர் பகத்சிங், பொருளாளர் ஆசைக்கொடி மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அரசு போக்குவரத்து கழகத்தில் உள்ள பழைய பஸ்களை அகற்றி புதிய பஸ்கள் வாங்க வேண்டும், பயணிகளின் கூட்ட நெரிசலை போக்குவதற்கு கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் விடுக்கப்பட்டன.