தளபதி
தி.மு.க. உண்ணாவிரத போராட்டத்தில் திரளாக பங்கேற்க வேண்டும்-மாவட்ட செயலாளர் அறிக்கை
- தி.மு.க. உண்ணாவிரத போராட்டத்தில் திரளாக பங்கேற்க வேண்டும்.
- மாவட்ட செயலாளர் தளபதி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மதுரை
மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க. செயலாளர் தளபதி எம்.எல்.ஏ. இன்று வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்த லின்படி, 'தமிழ்நாட்டு மாண வர்களின் மருத்துவ கனவை சிதைத்து அவர்களின் உயிரை பறிக்கும் நீட் தேர்வை மத்திய பா.ஜ.க. அரசு திரும்ப பெற வலியுறுத்தியும், ஆளுநரை கண்டித்தும்', வருகிற 20-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணி அளவில் பழங்காநத்தம் ரவுண்டானா நடராஜ் தியேட்டர் அருகில் மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க. இளைஞரணி- மாணவரணி- மருத்துவரணி சார்பில் உண்ணாவிரத போ ராட்டம் நடைபெறுகிறது.
இதில் மதுரை மாநகர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞரணி- மாணவரணி, மருத்துவரணி நிர்வாகிகள், மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதிக்கழக, வட்டக் கழக செயலாளர்கள், நிர்வாகிகள், ஒன்றிய, பேரூர், கிளை செயலாளர்கள், நிர்வாகிகள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள், கழக முன்னோடிகள் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.