உள்ளூர் செய்திகள்

ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் மூர்த்தி பேசினார்.

இந்தியாவில் உள்ள கட்சிகளுக்கு முன்னோடி இயக்கமாக தி.மு.க. திகழ வேண்டும்-அமைச்சர் பேச்சு

Published On 2023-08-28 05:35 GMT   |   Update On 2023-08-28 05:35 GMT
  • இந்தியாவில் உள்ள கட்சிகளுக்கு முன்னோடி இயக்கமாக தி.மு.க. திகழ வேண்டும்.
  • சேலம் இளைஞரணி மாநாடு ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் மூர்த்தி பேசினார்.

மதுரை

மதுரை திருப்பாலை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்டச் செயலாளர், அமைச்சர் மூர்த்தி தலைமை தாங்கி பேசியதாவது:-

டிசம்பர் 17-ந் தேதி சேலத்தில் தி.மு.க. இளைஞரணி மாநாடு நடைபெறுகிறது. இதில் மதுரை வடக்கு மாவட்ட இளைஞரணி சார்பில் 20,625 இளைஞரணி செயல் வீரர்கள் பங்கேற்கிறார்கள்.

சேலம் இளைஞரணி மாநாடு இந்தியாவில் உள்ள மற்ற கட்சிகளுக்கு முன்னோடி இயக்கமாக தி.மு.க. இயக்கம் திகழ்கின்ற வகையில் சிறப்புடன் நடைபெறும்.

செப்டம்பர் 20-ந்தேதி மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மேலூரில் மூத்த முன்னோடிகள் 3 ஆயிரம் தொண்டர்களுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பொற்கிழி வழங்குகிறார்.

மேலும் மதுரை கிழக்கு, சோழவந்தான், மேலூர் தொகுதிகளில் ஆகிய 3 தொகுதிகளில் உள்ள மூத்த முன்னோடிகள் 3 ஆயிரம் பேர்களுக்கு பொற்கிழியும், பூத்து கமிட்டி உறுப்பினர்கள் 10 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படு கிறது

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் சோமசுந்தர பாண்டியன், மாவட்ட துணை செய லாளர் வெங்கடேசன் எம்.எல்.ஏ., தலைமைச் செயற் குழு உறுப்பினர் கரு.தியாகராஜன், இளைஞரணி மாநில துணை செயலாளர் ஜி.பி.ராஜா, மாணவரணி மாவட்ட செயலாளர் மருதுபாண்டி, பகுதி செயலாளர் சசிகுமார், ஒன்றிய செயலாளர்கள் ரகுபதி, சிறைச்செல்வன், வழக்கறிஞர் அணி அமைப்பாளர் கலாநிதி, ஒன்றிய சேர்மன் வீரராகவன், இலக்கிய அணி நேருபாண்டி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அழகு பாண்டி, துணை அமைப்பா ளர்கள் வைகை மருது, இளங்கோ, பேரூர் செயலாளர் வாடிப்பட்டி பால்பாண்டி,நகர் செயலாளர் மேலூர் யாசின், விவசாய தொழி லாளர் அணி செயலாளர் ஒத்தக்கடை சரவணன், மாநகராட்சி கவுன்சிலர்கள் செல்வ கணபதி, பாபு, மகளிர் அணி மாவட்ட செயலாளர் உமா சிங்கத்தேவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News