உள்ளூர் செய்திகள்

திண்டியூர் ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி, சந்திரசேகர்.

ஊருக்கு உழைக்கும் திண்டியூர் ஊராட்சி தலைவர்

Published On 2023-01-05 07:50 GMT   |   Update On 2023-01-05 07:50 GMT
  • ஊருக்கு உழைக்கும் திண்டியூர் ஊராட்சி தலைவர் லட்சுமி சந்திரசேகரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
  • கிழக்கு யூனியன் அலுவலர்கள் மற்றும் திண்டியூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பொதுமக்கள் என பலர் கலந்து கொள்கின்றனர்.

மதுரை

மதுரை மாவட்டம் கிழக்கு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட திண்டியூர் ஊராட்சி மன்ற தலைவராக லட்சுமி குருசந்திரசேகர் உள்ளார். இவர் ஊராட்சித் தலைவராக பதவியேற்ற நாள் முதல் மக்கள் பணியில் தன்னை அர்ப்பணித்து பல சேவைகளை செய்து வருகிறார்.

லட்சுமியும், அவரது கணவர் குரு சந்திரசேகரும் திண்டியூர் ஊராட்சி பகுதிகளில் வசிக்கும் ஏழை மக்களின் இல்லத் திருமண நாள் நிகழ்ச்சியில் பங்கேற்று ஏழை குடும்பங்களுக்கு திருமண சீர்வரிசையாக தங்கள் சொந்த செலவில் கட்டில், மெத்தை, தலகாணி உள்ளிட்ட பொருட்களை அன்பளிப்பாக அளித்து வருகின்றனர்.

மேலும் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாளில் ஏழை மக்களுக்கு உதவுகின்ற வகையில் இலவசமாக வேஷ்டி,சேலை, இனிப்பு வழங்கியும் வருகின்றனர். இது தவிர இப்பகுதியில் அரசு நிர்ணயித்த தொகையில் தரமான வகையில் சாலை மற்றும் சாக்கடை, தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகளை செய்து தருகின்றனர். இதற்கு தங்களது சொந்த பணத்தையும் செலவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் திண்டியூர் ஊராட்சிக்கு புதிய அலுவலக கட்டிட கட்ட அரசு அனுமதி வழங்கி அதற்காக ரூ.18 லட்சம் மதிப்பீடு செய்து வழங்கியது.

இருந்த போதிலும் இந்த கட்டிடம் தரமாக இருக்க வேண்டும் என்று எண்ணிய ஊராட்சித் தலைவர் தனது சொந்த பணத்தில் ரூ.13 லட்சம் செலவு செய்து ஆக மொத்தம் 31 லட்சத்தில் ஊராட்சி அலுவலகத்தை கட்டி முடித்துள்ளனர். இந்த கட்டிடத்தை நாளை 6-ந் தேதி மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சருமான மூர்த்தி திறந்து வைக்கிறார்.

இதில் மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ் சேகர், கூடுதல் கலெக்டர் சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வில்சன், சுந்தரசாமி, கிழக்கு யூனியன் அலுவலர்கள் மற்றும் திண்டியூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பொதுமக்கள் என பலர் கலந்து கொள்கின்றனர்.

Tags:    

Similar News