உள்ளூர் செய்திகள்

கட்டச்சேலை பட்டியில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தபோது எடுத்த படம்.

கிருஷ்ண ஜெயந்தி விழாவில் பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபாடு

Published On 2023-09-06 08:02 GMT   |   Update On 2023-09-06 08:02 GMT
  • மேலூர் கட்டச்சோலை பட்டியில் கிருஷ்ண ஜெயந்தி விழாவில் பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபாடு செய்தனர்.
  • கோவில் அருகே உள்ள விநாயகர்கோவில் மண்டபத்தில் சிறப்பு அன்ன தானம் நடைபெற்றது.

மேலூர்

மேலூர் தாலுகா வெள்ள லூர் சேகரம், கட்டச்சோலை பட்டியல் அமைந்திருக்கும் ஸ்ரீ கோபாலகிருஷ்ணன் சமேத பாமா ருக்மணி கோவிலின் 16-ம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது. பக்தர்கள் மாலை அணிந்து 15 நாட்கள் விரதம் இருந்து வந்தனர்.

கோபாலகிருஷ்ண கோவில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால் குடம் எடுத்து ஊர்வலமாக சென்று பின்பு கோவில் வந்தடைந்தனர். பின்னர் கிருஷ்ணனுக்கு பாலா பிஷேக நடைபெற்றது. உரியடித்தல் தீப ஆராதனை நடைபெற்றது. பொதுமக்கள் சாமி தரிசனம் செய்து வழி பட்டனர். கோவில் அருகே உள்ள விநாயகர்கோவில் மண்டபத்தில் சிறப்பு அன்ன தானம் நடைபெற்றது.

இந்த அன்னதானத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்ட னர். கோபாலகிருஷ்ணன் சுவாமி ஊர்வலம் இடைய வலசை, இடையர்கோவில் பட்டி, இந்திராநகர், வெள்ள லூர் நகரத்தார் வீதி, வெள்ள லூர் மந்தை கருப் பன சுவாமி கோவில், ஏழை காத்த அம்மன் கோவில், அரசு மருத்துவமனை, மன்ற மலை ஒத்தப்பட்டி வழியாக சுவாமி கோவில் வந்தடைந் தது. சிறுவர்களுக்கு விளை யாட்டு போட்டு நடை பெற்றது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை கட்டச் சோலைப்பட்டி கிராமத்தார்கள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்த னர்.

Tags:    

Similar News