உள்ளூர் செய்திகள்

திருமங்கலம் தின சரி மார்க்கெட்டில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். 

திருமங்கலம் தினசரி மார்க்கெட்டில் ஆக்கிரமிப்பை அகற்ற முடிவு

Published On 2022-12-22 07:47 GMT   |   Update On 2022-12-22 08:48 GMT
  • ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து திருமங்கலம் தினசரி மார்க்கெட்டில் ஆக்கிரமிப்பை அகற்ற முடிவு செய்யப்பட்டது.
  • வியாபாரிகள் சங்கத்தினர் ஆக்கிரமிப்புகளை தாங்களே படிப்படியாக எடுத்துவிடுவதாகவும், மேற்கூரைகளை அகற்றிவிடுவதாகவும் தெரிவித்தனர்.

திருமங்கலம்

மதுரை மாவட்டம் திருமங்கலம் தினசரி மார்க்கெட்டில் எளிதில் தீப்பற்றக்கூடிய வகையில் பந்தல் அமைக்கப்பட்டு ள்ளது. பல்வேறு பகுதிகளில் நடைபாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டு காய்கறி கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக மதுரை ஐகோர்ட்டில் பொதுநல மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இதனை விசாரித்த ஐகோர்ட்டு திருமங்கலம் தினசரி மார்க்கெட் விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து கலெக்டர் அனீஷ்சேகர் உத்தரவி ன்படி திருமங்கலம் தாலுகா அலுவலகத்தில் அதிகாரிகள், வியாபாரிகள் கலந்து கொண்ட கூட்டம் தாசில்தார் சிவராமன் தலைமையில் நடந்தது.

இதில் நகராட்சி தலைவர் ரம்யாமுத்துக்குமார், டவுன் பிளானிங் அதிகாரி வேல்முருகன், கவுன்சிலர் திருக்குமார், வீரக்குமார். வருவாய்த்துறை சார்பில் சர்வேயர் ரம்யா மற்றும் வியாபாரிகள் சங்கம் சார்பில் மணிசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய வியாபாரிகள் சங்கத்தினர் ஆக்கிரமிப்புகளை தாங்களே படிப்படியாக எடுத்துவிடுவதாகவும், மேற்கூரைகளை அகற்றிவிடுவதாகவும் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து நகராட்சி தலைவர் ரம்யா முத்துக்குமார் திருமங்கலம் தினசரி மார்க்கெட்டில் ஆய்வு நடத்தினர்.

Tags:    

Similar News