உள்ளூர் செய்திகள்

மாநகராட்சி நீச்சல் குளத்தில் உற்சாகமாக குளித்த சிறுவர்களையும், நீச்சல் குளத்தில் குளிக்க வெளியே காத்து நின்ற வாலிபர்களையும் படத்தில் காணலாம்.

மதுரை மாநகராட்சி நீச்சல் குளத்தில் திரண்ட சிறுவர்கள்-வாலிபர்கள்

Published On 2023-03-19 09:16 GMT   |   Update On 2023-03-19 09:16 GMT
  • மதுரை மாநகராட்சி நீச்சல் குளத்தில் சிறுவர்கள்-வாலிபர்கள் திரண்டனர்.
  • நீண்ட வரிசையில் வயது வித்தியாச மின்றி அனைவரும் காத்திருந்தனர்.

மதுரை

மதுரை தல்லாகுளத்தில் மாநகராட்சியின் நீச்சல் குளம் உள்ளது. பராமரிப்பு பணி காரணமாக கடந்த சில ஆண்டுகளாக இந்த நீச்சல்குளம் செயல்படாமல் இருந்தது. இந்நிலையில் புனரமைப்பு பணிகள் முடிந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த நீச்சல்குளம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது.

புதுபொலிவுடன் காணப்படும் இந்த நீச்சல்குளத்தில் ஏராளமானோர் ஆர்வமுடன் வந்து குளித்து சென்றனர். இங்கு குளிப்பதற்கு சிறுவர்களுக்கு 20 ரூபாயும், பெரியவர்களுக்கு 40 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.அந்த கட்டணத்தை செலுத்தி தினமும் ஏராளமானோர் குளித்து வந்தனர்.

இந்நிலையில் மதுரையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. பகல் நேரம் மட்டுமின்றி இரவிலும் கடும் வெப்பம் நிலவி வருகிறது. வெயில் அதிகரித்துள்ள நிலையில் வெப்பத்தை தணிக்க சிறுவர்கள், வாலிபர்கள் நீர்நிலைகளுக்கு சென்று நீண்ட நேரம் நீராடி மகிழ்கின்றனர்.

அதிலும் மதுரை தல்லாகுளத்தில் உள்ள மாநகராட்சி நீச்சல் குளத்திற்கு வருகின்றனர். விடுமுறை தினமான இன்று இன்று ஏராளமான சிறுவர்கள், வாலிபர்கள் திரண்டனர். இதனால் அங்கு கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது. ஒரே நேரத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் குவிந்ததால் நுழைவு கட்டண சீட்டு பெறுவதற்காக நீண்ட வரிசையில் வயது வித்தியாச மின்றி அனைவரும் காத்திருந்தனர்.

வாலிபர்களும், சிறுவர்க ளும் நீச்சல் குளத்தில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

Tags:    

Similar News