உள்ளூர் செய்திகள்

பேச்சுவார்த்தையின் போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் சமரசம் செய்தனர்.

பாப்பாபட்டி ஓச்சாண்டம்மன் கோவிலில் சிவராத்திரி திருவிழா நடத்த தடை

Published On 2023-02-18 08:12 GMT   |   Update On 2023-02-18 08:12 GMT
  • பாப்பாபட்டி ஓச்சாண்டம்மன் கோவிலில் சிவராத்திரி திருவிழா போலீஸ் பாதுகாப்புடன் வழிபாடு செய்ய ஏற்பாடு செய்யப்படும்.
  • இரு தரப்பினருக்கிடையே சமரசம் ஏற்படாததால் வருவாய் துறையின் மூலம் திருவிழாவை நடத்த ஏற்பாடு செய்யப்படும்.

உசிலம்பட்டி

உசிலம்பட்டி அருகே உள்ள பாப்பாபட்டி ஓச்சாண்டம்மன் மாசி மகா சிவராத்திரி திருவிழா மற்றும் பெட்டி தூக்குவது குறித்து 8 மற்றும் 2, 10 தேவர்கள் வகையறாவுக்கும், 5 பூசாரி வகையறாவுக்கும் பிரச்சினை இருந்து வருகிறது.

இைதயடுத்து பூசாரி மற்றும் கோவில் நிர்வாகியிடம் உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சமரச பேச்சு வார்த்தை நடந்தது. கோட்டாட்சியர் சங்கரலிங்கம், வட்டாட்சியர் சுரேஷ் பிரெடரிக் கிளமெண்ட், போலீஸ் டி.எஸ்.பி. நல்லு ஆகியோர் பங்கேற்றனர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை.

இதையடுத்து வருவாய் துறையினர் போலீஸ் பாதுகாப்புடன் கோவிலை திறந்து வைத்து பக்தர்களுக்கு வழிபாடு செய்ய ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்தனர்.

மேலும் பெரிய பூசாரி தேர்வு செய்வதில் பூசாரி தரப்பினருக்கிடையே நடந்த பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்படாததால் பெட்டி தூக்கும் திருவிழாவும் நிறுத்தி வைக்கப்பட்டது.

பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோவில் திருவிழா கோர்ட்டு உத்தரவுப்படி நடத்த இரு தரப்பினருக்கிடையே சமரசம் ஏற்படாததால் வருவாய் துறையின் மூலம் திருவிழாவை நடத்த ஏற்பாடு செய்யப்படும். அதற்கு காவல் துறையினரின் தகுந்த பாதுகாப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

Tags:    

Similar News