உள்ளூர் செய்திகள்
அலங்காநல்லூர் அரசு பள்ளியில் விழிப்புணர்வு பேரணி
- அலங்காநல்லூர் அரசு பள்ளியில் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
- ஆசிரியர்கள் மற்றும் இயன்முறை மருத்துவர்கள், மாணவ-மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியத்தில் உள்ள மணியஞ்சி அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் அலங்காநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளிகளில் மாற்றுத்திறனாளி குழந்தைகளை பள்ளியில் சேர்த்தலுக்கான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தலைமை ஆசிரியர்கள் ஜோசப் சகாயம், சுபா ஆகியோர் தலைமை தாங்கினர்.
வட்டார வளமைய மேற்பார்வையாளர் ரமேஷ்ராஜ் முன்னிலை வகித்தார். வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனர்கள் தேவி, மைவிழிசெல்வி, சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் இயன்முறை மருத்துவர்கள், மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். விழிப்புணர்வு பேரணியின் போது பொதுமக்களிடம் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான கல்வி மற்றும் அடிப்படை உரிமைகளை பற்றி விரிவாக எடுத்துக்கூறப்பட்டது.