உள்ளூர் செய்திகள்

ஆலோசனை கூட்டத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி பேசினார்.

தீபாவளி பண்டத்தில் செயற்கை வண்ணம் சேர்க்கக்கூடாது

Published On 2022-10-14 08:38 GMT   |   Update On 2022-10-14 08:38 GMT
  • தீபாவளி பண்டத்தில் செயற்கை வண்ணம் சேர்க்கக்கூடாது
  • பண்டங்களை வாங்கும் போது ஏதாவது குறைபாடு இருந்தால் பாதிக்கப்பட்டோர் 9444042322 அலைபேசி என்னில் தொடர்பு கொண்டு புகார் தரலாம்.

மதுரை

மதுரை மாநகரில் தீபாவளி பலகாரம் செய்யும் வியாபாரிகள் உணவு பாதுகாப்பு விதிகளை கடைபிடிப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், வர்த்தக தொழிற்சங்க அரங்கில் நடந்தது. இதில் 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் மதுரை மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் ஜெயராம பாண்டியன் கலந்து கொண்டு பேசியதாவது:-

தீபாவளி பண்டம் செய்யும் வியாபாரிகள் ஆர்.சி. மற்றும் லைெசன்சு ஆகியவற்றை கண்டிப்பாக வைத்து இருக்க வேண்டும். உணவு பொருளை பார்சல் செய்வோர் அதற்கான அங்கீகரிக்கப்பட்ட லேபிள்களை பயன்படுத்த வேண்டும். அதில் உணவு தயாரிப்பு தேதி, காலாவதியான நாள் ஆகியவை குறிப்பிடப்பட்டு இருப்பது அவசியம்.

உணவுப் பொருட்களில் அனுமதிக்கப்பட்ட அளவை தாண்டி 'கலரிங்' சேர்க்கக் கூடாது. இது நுகர்வோரிடம் கேன்சர் மற்றும் பல்வேறு பின்விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்பு உண்டு. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மதுரை மாநகரில் இன்று முதல் தினந்தோறும் அதிரடி சோதனைகள் நடத்தப்பட உள்ளன. உணவு தயாரிப்பு கூடங்களில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது. அப்படி பயன்படுத்தினால் 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

தீபாவளி பலகார விற்பனை கடைகளில் பயன்படுத்தும் எண்ணையை ரோட்டோர கடைகளுக்கு விற்பனை செய்யக்கூடாது. ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை தொடர்ந்து பயன்படுத்த கூடாது.

இதனால் புற்றுநோய் மற்றும் பல்வேறு நோய்கள் வர வாய்ப்பு உண்டு. தீபாவளி பண்டங்களை வாங்கும் போது ஏதாவது குறைபாடு இருந்தால் பாதிக்கப்பட்டோர் 9444042322 அலைபேசி என்னில் தொடர்பு கொண்டு புகார் தரலாம். வாட்ஸ் அப் மூலம் தகவலை பகிரலாம். நாங்கள் சம்பந்தப்பட்ட கடையில் அதிரடி சோதனை நடத்தி நிச்சயமாக நடவடிக்கை எடுப்போம்" என்று தெரிவித்து உள்ளார்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News