உள்ளூர் செய்திகள்

நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு மதுரை மாவட்ட பொறுப்பாளர் எஸ்.ஆர்.தங்கப்பாண்டி தலைமையில் கரு.சுந்தராஜன் ஏற்பாட்டில் கொடிமங்கலம் பகுதியில் அமைந்துள்ள குழந்தைகள் அங்கான்வாடி மையத்தில் மூன்றடுக்கு ரேக் பீரே, நாற்காலி உள்ளிட்ட உதவிகள் வழங்கப்பட்டன. 

மதுரையில் அங்கன்வாடி மையத்துக்கு பீரோ-நாற்காலி வழங்கிய மக்கள் இயக்க நிர்வாகிகள்

Published On 2023-06-22 14:29 IST   |   Update On 2023-06-22 14:29:00 IST
  • மதுரையில் அங்கன்வாடி மையத்துக்கு மக்கள் இயக்க நிர்வாகிகள் பீரோ-நாற்காலி வழங்கினர்.
  • சதீஷ்குமார், சதீஷ், விஜய் விக்கி, தளபதி ஆனந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மதுரை

இளைய தளபதி நடிகர் விஜய் பிறந்தநாளையொட்டி மதுரை மாவட்டத்தில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இன்று ஏழை, எளிய மக்க ளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

தொகுதி, பகுதி வாரியா கவும், கிராம பகுதிகளிலும் ஏழை, எளிய மக்களுக்கு நிர்வாகிகள் இனிப்புகள், அன்னதானம், நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தி பொது மக்களுக்கு நல உதவிகளை மக்கள் இயக்க நிர்வாகிகள் வழங்கினர்.

உசிலம்பட்டி நகர தலைவர் எஸ்.ஓ.பிம்.விஜய் ஏற்பாட்டில் உசிலம்பட்டி, செல்லம்பட்டி, சேடப்பட்டி பகுதிகளில் மக்கள் இயக்க கிளை திறப்பு விழா நடந்தது. தெற்கு மாவட்ட பொருளா ளர் விக்கி ஏற்பாட்டில் மதுரை வடக்கு மாசி வீதி யில் அன்னதானம் வழங்கப் பட்டது.

திருப்பரங்குன்றம் கைத்தறி நகர் பகுதியில் அமைந்துள்ள மனநிலை வளர்ச்சி குன்றியோருக்கான காப்பகத்தில் கைத்தறிநகர் சூர்யா விஜய் ஏற்பாட்டில் அன்னதான விழா நடந்தது.

மாவட்ட பொறுப்பாளர் எஸ்.ஆர்.தங்கப்பாண்டி தலைமையில் மதுரை மாவட்டம் கொடிமங்கலம் பகுதியில் உள்ள அங்கன் வாடி மையத்தில் படித்து வரும் குழந்தைகளுக்கு நோட்டு, புத்தகங்கள் மற்றும் இனிப்புகள் வழங்கினர்.

மேலும் அங்கன்வாடி மையத்திற்கு தேவையான பீரோ மற்றும் நாற்காலி களையும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் வழங்கினர். இந்த நிகழ்ச்சி யில் நிர்வாகிகள் ஷாம், திலகர், சதீஷ்குமார், சதீஷ், விஜய் விக்கி, தளபதி ஆனந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News