உள்ளூர் செய்திகள்

இலவச ஆம்புலன்ஸ் சேவையை தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ராணுவ வீரர் நினைவாக ஆம்புலன்ஸ் சேவை

Published On 2022-06-05 10:28 GMT   |   Update On 2022-06-05 10:28 GMT
  • திருமங்கலம் அருகே விபத்தில் பலியான ராணுவ வீரர் நினைவாக ஆம்புலன்ஸ் சேவை தி.மு.க. மாவட்ட செயலாளர் தொடங்கி வைத்தார்.
  • ஏழை-எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இலவச ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைக்கு ஏற்பாடு செய்தனர்.

திருமங்கலம்

திருமங்கலம் அருகே உள்ள உலகாணி கிராமத்தைச் சேர்ந்த காளிமுத்து-மீனாட்சி தம்பதியரின் மகள் பாலமுருகன். இவர் ராணுவ வீரராக பணியாற்றினார். 6 வருடத்திற்கு முன்பு ஊருக்கு வந்திருந்த நிலையில் பாலமுருகன் விபத்தில் சிக்கி மரணமடைந்தார்.

பாலமுருகனின் 29-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது சகோதரர் பால்பாண்டி மற்றும் குடும்பத்தினர் சார்பில் ஏழை-எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இலவச ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைக்கு ஏற்பாடு செய்தனர்.

இலவச ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவை தொடக்க விழா சின்ன உலகாணி கிராமத்தில் நடந்தது. இதில் மதுரை புறநகர் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மணிமாறன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இலவச ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் திருமங்கலம் நகர தி.மு.க. செயலாளர் ஸ்ரீதர், திருமங்கலம் நகர் மன்ற தலைவர் ரம்யா முத்துக்குமார், துணைத் தலைவர் ஆதவன் அதியமான், மாவட்ட கவுன்சிலர் கிருத்திகா தங்கபாண்டியன், முன்னாள் ஒன்றிய செயலாளர் ஆதிமூலம், ஒன்றிய மகளிரணி அமைப்பாளர் லாவண்யா, எஸ்.கே.ஜி. மருத்துவமனை மருத்துவர் அமுதகுமார், வேலு மருத்துவமனை மருத்துவர் சரவணன், கூடக்கோவில் தலைமை ஆசிரியர்கள் ஞானம்மாள், மோகன், ஆசிரியர் செந்தில்வேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News