உள்ளூர் செய்திகள்

எம்.எஸ்.ஷா

தமிழகம் முழுவதும் விரைவில் போராட்டம்

Published On 2023-06-10 15:33 IST   |   Update On 2023-06-10 15:33:00 IST
  • எஸ்.வி.சேகரை கண்டித்து தமிழகம் முழுவதும் விரைவில் போராட்டம் நடத்தப்படும்.
  • மாநில பொறுப்பாளர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.

மதுரை

பாரதீய ஜனதா கட்சியின் பொருளாதார பிரிவு மாநில தலைவர் எம்.எஸ்.ஷா இன்று கூறியதாவது:-

தமிழக பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை குறித்து நடிகர் எஸ்.வி.சேகர் தேவையற்ற கருத்துக்களை கூறியுள்ளார். இதை பா.ஜ.க. பொருளாதார பிரிவு ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது.

பா.ஜ.க. மாநிலத்தலை வராக பொறுப்பேற்றதில் இருந்து இளம் வயதாக இருந்தாலும் அனைத்து கேள்விகளுக்கும் அச்சமின்றி பதில் கூறி வருகிறார். அவரது திறமை மற்றும் அறிவாற்றல் காரணமாக தமிழகம் முழுவதும் திராவிட இயக்கங்களுக்கு இணையாக பா.ஜ.க. காலூன்றி உள்ளது.

இப்படி அனைத்து தகுதி படைத்த தலைவரை எஸ்.வி. சேகர் சமூக ஊடகங்களி லும், வலைதளங்களிலும் அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாமல் தேவையற்ற கருத்துக்களை கூறியுள்ளார். அவரது தவறான விமர்சனத்தை ஏற்க முடியாது.

எனவே எஸ்.வி.சேகரின் இந்த பேச்சை கண்டித்து தமிழகம் முழுவதும் மாநில தலைவரின் அனுமதியை பெற்று விரைவில் மிகப் பெரிய ஆர்ப்பாட்டம், உருவ பொம்மை எரிப்பு போராட்டம் நடத்தப்படும். இது தொடர்பாக நாளை மாநில பொறுப்பாளர் களுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News