உள்ளூர் செய்திகள்

அ.தி.மு.க. மாநாடு அழைப்பிதழை பொதுமக்களுக்கு ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. வழங்கினார்.

அ.தி.மு.க. மாநாடு விழிப்புணர்வு பிரசார வாகனம்

Published On 2023-08-14 13:27 IST   |   Update On 2023-08-14 13:27:00 IST
  • அ.தி.மு.க. மாநாடு விழிப்புணர்வு பிரசார வாகனத்தை ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
  • நிலையூர் முருகன் முன்னிலை வகித்தார்.

திருப்பரங்குன்றம்

மதுரை வலையங் குளத்தில் வருகிற 20-ந்தேதி நடைபெற உள்ள அ.தி.மு.க. மாநாட் டிற்கு பொதுமக்களுக்கு அழைப்பிதழ் வழங்கி மாநாடு தொடர்பான பிரசார வாகனத்தை மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. இன்று திருப்பரங் குன்றத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

கிரிவலப்பாதையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பகுதி செயலாளர் வக்கீல் ரமேஷ் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன் முன்னிலை வகித்தார். இலக்கிய அணி மாவட்ட செயலாளர் கவிஞர் மோகன்தாஸ் வரவேற்றார். மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பிரசார வாகனத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். மேலும் திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள பொது மக்களுக்கு மாநாடு தொடர்பான அழைப்பிதழை வழங்கி அவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கினார்.

நிகழ்ச்சியில் பகுதி துணை செயலாளர் செல்வ குமார், சிறுபான்மை பிரிவு மாவட்ட பொருளாளர் காத்தூன்பீவி, சிறுபான்மை பிரிவு பகுதி செயலாளர் உசேனா பீவி, வட்டச் செயலாளர்கள் பொன்.முருகன், நாகரத்தினம், பாலா, அவைத் தலைவர் ராசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News