உள்ளூர் செய்திகள்

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள நடவடிக்கை- முன்னாள் அமைச்சர் கோரிக்கை

Published On 2022-11-02 15:08 IST   |   Update On 2022-11-02 15:08:00 IST
  • உயிரிழப்பு இல்லாத வகையில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • முன்னாள் அமைச்சர் ஆர்.பி‌.உதயகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

மதுரை

முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் இன்று மதுரையில் கூறியதாவது:-

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் தொடங்கி டிசம்பர் வரை வடகிழக்கு பருவமழை காலம் ஆகும்.

ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்துக்கு இயல்பாக கிடைக்கக்கூடிய 448 மில்லி மீட்டர் மழைநீரில், ஏறத்தாழ 50 சதவீதம் குடிநீருக்காகவும், விவசாயத்திற்காகவும் கிடைக்கக்கூடிய மழைப்பொழிவு ஆகும்.இந்தாண்டு இயல்பை விட 38% முதல் 75% வரை கூடுதல் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் நமக்கு எச்சரிக்கை விடுத்து இருக்கிறது.

இந்த நிலையில் கடந்த 29ம் தேதி வடகிழக்கு பருவமழைத்து தொடங்கி தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. தற்போது தமிழ்நாட்டில் 43 நீர்த்தேக்கங்களின் 75 சதவீதம் முதல் 100 சகவீதம் வரைநீர் நிரம்பி உள்ளது. 17 நீர்தேக்கங்களில் 50 சகவீதம் முதல் 75 சகவீதம் வரை மழை நீரால் நீர்நிலை நிறைந்திருப்பதாக செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது.

சென்னை கேகே நகர், அசோக் நகர், பூந்தமல்லி நெடுஞ்சாலை கோயம்பேடு, காசிமேடு உள்ளிட்ட பகுதிகளில் சென்னை வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

சென்னையில் வடிகால் பணிகள் 40 சதவீத பணிகள் கூட முடியவில்லை என்பது தான் இன்றைய உண்மையான நிலை.

வர்தா புயல், ஒக்கி புயல், கஜா புயல், நிவர்புயல் போன்றவற்றில் அதிமுக அரசு சிறப்பாக செயல்பட்டது. இதனால் ஒரு உயிரிழப்பு கூட இல்லாமல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

தற்போது சிங்கார சென்னை திட்டத்தில் கட்டமைப்பு நிதி, வெள்ளத் தடுப்பு நிதி உள்ளிட்ட பல்வேறு நிதியின் புதிய மழைநீர் வடிகால் கட்டமைப்பு பணிகள் வடிகால் தூர் வாறும் பணிகள் நடைபெறுவதாக அரசு அறிவித்திருக்கிறது.இந்த ஆண்டு 1058 கிலோ மீட்டர் தூரத்திற்கு பணிகள் மேற்கொள்வதாக அறிவிப்புகள் வெளியிட்டி ருக்கிறார்கள்.முதல்வர் ஆய்வு செய்யும் பகுதிக்கு அருகே சேறும், சகதியுமாக இருக்கிறது. அங்கு எந்த பணிகளும் நடைபெறவில்லை. இதுதான் உண்மையான கள நிலவரம்.

மேலும் வடிகால் பணி யிலே ஒருங்கிணைப்பது, அனைத்து துறைகளுக்கு ஒருங்கிணைப்பு என்பது கேள்விக்குறியாக உள்ளது. பெரும்பாலான கால்வாய்களில் கான்கிரிட் கம்பிகள், ஆறு அடி உயரத்துக்கு முழுவதுமாக வெளியே நீண்ட படி பொது மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்கிற காட்சிகளையும் காண முடிந்தது.

மழை கொஞ்ச நேரம் பெய்தால் கூட, சென்னையில் மழை நீர் சாலையை மூழ்கடித்து செல்கிறது மக்கள் அவதிப்படக்கூடிய சூழ்நிலையை நாம் பார்க்கிறோம்.

உயிரை காவு வாங்குற நிலை. தினமும் உயிரை கையில் பிடித்து கொண்டு சாலையை கடந்து செல்லக்கூடிய நிலை இருக்கிறது. சில பகுதிகளில் மழை நீர் வடிகால் பணிகள் அவசர கதியில் முடிக்கப்பட்டு சாலையில் மண்ணை கொட்டி அந்த பணி செய்துள்ளார்கள்.

வெள்ள பாதிப்புகளை தடுப்பதற்கு ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி கடந்த கால ஆட்சி காலத்தில் பல்வேறு ஆலோசனை கொடுத்த பரிந்துரைகள் அடிப்படையில் இடந்த அதிமுக ஆட்சியில் நடை முறைப்ப டுத்தப்பட்டது.

கடந்த ஆண்டு சென்னை யில் பெய்த பருவமலையின் காரணமாக சென்னை மக்கள் பாதிக்கப்பட்டது. அரசு சரியான நடவடிக்கை எடுக்காத காரணத்தால் தான். பருவமலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க இந்த அரசு தவறி விட்டது ஆகவே இந்த பேரிடர் காலங்களில் உயிர்இழப்புகள் இல்லாத வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News