உள்ளூர் செய்திகள்

முகாமில் போலீஸ் கமிஷனர் செந்தில்குமாரிடம் பொதுமக்கள் மனு வழங்கினர்.

விசாரணை திருப்தியில்லாத மனுதாரர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை

Published On 2022-12-21 08:11 GMT   |   Update On 2022-12-21 08:11 GMT
  • விசாரணை திருப்தியில்லாத மனுதாரர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் தலைமையில் முகாம் நடந்தது.
  • பொது மக்கள் தங்களுக்கு குறை, நிறைகள் இருந்தால் 78068-60806 மற்றும் 0452-2344989 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்

மதுரை

மதுரை மாநகரில் காவல் நிலையங்களுக்கு வருகை தரும் பொதுமக்கள் நல்ல முறையில் நடத்தப்ப டுவதை உறுதி செய்யவும், அவர்களது குறைகளை விரைவாக தீர்க்கவும், பொது மக்கள் காவல் நிலையத்தில் வெகுநேரம் காத்திருப்பதை தவிர்க்கவும், இவற்றை கண்காணிக்கவும் ''Grievance REdressal And Tracking System'' (GREAT) என்ற திட்டம் 10.10.2022 முதல் ஆரம்பிக்கப்பட்டு நடந்து வருகிறது.

காவல் நிலையத்திற்கு வரும் மனுதாரர்கள் மற்றும் அவர்களது மனு விபரங்கள் பதிவு செய்யப்பட்டு அதன் பதிவுகள், உடனுக்குடன் மாநகர காவல் அலுவலகத்தில் நிறுவப்பட்டுள்ள சர்வர் மூலமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

பின்னர் மாநகர காவல் அலுவலகத்தில் இருந்து மனுதாரர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அவர்கள் நடத்தப்பட்ட விதம், குறைகள் கேட்கப்பட்டனவா? என்ற விபரம் பெறப்படுகிறது.

இந்த திட்டம் தொடங்கப்பட்டபிறகு, மதுரை மாநகரக் காவல் நிலையங்களில் இதுவரை 4 ஆயிரத்து 706 புகார் மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அந்த புகார்தாரர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு காவலர்கள் நடத்திய விதம், எடுக்கப்பட்ட நடவடி க்கைகள், விசாரணையின் விபரம் முதலியவற்றை கேட்டபோது 165 பேர் தங்களது மனுக்கள் சரியாக விசாரிக்கப்படவில்லை என்றும், விசாரணையில் திருப்தியில்லை என்றும் தெரிவித்தனர்.

இதையடுத்து 165 மனுதா ரர்களின் குறைகளை மீண்டும் கேட்டறிந்து அவர்களது குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கும் வகையில் மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார் தலைமையில் இன்று மதுரை மாநகர் ஆயுதப்படை மாரியம்மன் கோவில் திருமண மண்ட பத்தில் குறை தீர்க்கும் முகாம் நடத்தப்பட்டது.

மேலும் மனுதாரர்களுக்கு சட்ட ஆலோசகர் மூலம் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

இந்த முகாமில் துணை கமிஷனர்கள் மோகன்ராஜ், சீனிவாச பெருமாள், வனிதா, போக்குவரத்து துணை கமிஷனர் ஆறுமுகசாமி, கூடுதல் துணை கமிஷனர் திருமலை குமார் உள்பட போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பொது மக்கள் தங்களுக்கு குறை, நிறைகள் இருந்தால் 78068-60806 மற்றும் 0452-2344989 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று மாநகர ேபாலீஸ் கமிஷனர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News