உள்ளூர் செய்திகள்

திருமங்கலத்தில் நகராட்சி தலைவர் ரம்யா முத்துக்குமார் தலைமையில் கிராமசபை கூட்டம் நடந்தது. 

அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை- நகராட்சி தலைவர் உறுதி

Published On 2022-11-02 07:27 GMT   |   Update On 2022-11-02 07:27 GMT
  • திருமங்கலம் நகராட்சியில் அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும்.
  • கிராமசபை கூட்டத்தில் தலைவர் ரம்யா முத்துக்குமார் உறுதியளித்துள்ளார்.

திருமங்கலம்

மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சியில் முதல் பகுதி சபா கூட்டம் 5 மற்றும் 6-வது வார்டுகளை இணைத்து கங்கன் காலனியில் காளியம்மன் கோவில் அருகே நடைபெற்றது.

நகராட்சி தலைவர் ரம்யா முத்துக்குமார் தலைமை வகித்தார். ஆணையாளர் டெரன்ஸ் லியோன், நகராட்சி துணைத்தலைவர் ஆதவன் அதியமான் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக தி.மு.க. நகர செயலாளர் ஸ்ரீதர், நகராட்சி கவுன்சில் குழுத்தலைவர் ஜஸ்டின் திரவியம் கவுன்சிலர்கள் திருக்குமார், வீரக்குமார், நகர தி.மு.க. நிர்வாகிகள் முத்துக்குமார், ஹரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பகுதி சபா கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் தங்களது வார்டு பகுதியில் கூடுதல் குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும், தெருவிளக்கு வசதி வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி பேசினர். இதற்கு பதில் அளித்து பேசிய நகராட்சி தலைவர் ரம்யாமுத்துக்குமார், கடந்த 10 ஆண்டுகளாக அ.தி.மு.க. ஆட்சியில் போதுமான அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை. நாங்கள் பொறுப்பேற்று 6 மாதங்கள் தான் ஆகிறது. விரைவில் அடிப்படை வசதிகளை உடனுக்குடன் பூர்த்தி செய்வோம் என தெரிவித்தார். இதனை த்தொடர்ந்து பொதுமக்கள் நகராட்சி ஆணையாளர் டெரன்ஸ் லியோனிடம் மனுக்களை கொடுத்தனர்.

இதே போல் 7-வதுவார்டு 8-வது வார்டு மற்றும் 11-வது வார்டு மற்றும் 12-வது வார்டுகளிலும் நேற்று நகராட்சி தலைவர் தலைமையில் பகுதி சபா கூட்டம் நடைபெற்றது. இந்த வார்டுகளிலும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகள் குறித்து பேசினர்.

Tags:    

Similar News