உள்ளூர் செய்திகள்

முன் விரோதத்தில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு

Published On 2022-10-28 08:32 GMT   |   Update On 2022-10-28 08:32 GMT
  • முன் விரோதத்தில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
  • திருப்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமாரை தாக்கியவர்களை தேடி வருகின்றனர்.

மதுரை

மதுரை திருப்பாலை, ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 37). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் செந்தில்குமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு, மதுரை வந்தார். நேற்று காலை அவர் தனது குழந்தைகளை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார்.

பின்னர் அவர் வீடு திரும்பி கொண்டு இருந்தார். அப்போது பொன்விழா நகர், ஜூப்ளி டவுன் அருகே 2 பேர் அவரை வழிமறித்து தகராறு செய்தனர். அவர்கள் செந்தில்குமாரை கீழே தள்ளி, சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்று விட்டனர்.

இதில் படுகாயம் அடைந்த செந்தில்குமார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுபற்றிய புகாரின் பேரில் திருப்பாலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் செந்தில்குமாருக்கும், அவரது சகோதரர்களுக்கும் இடையே சொத்து தகராறு காரணமாக முன் விரோதம் உள்ளது தெரிய வந்தது. இது தவிர செந்தில்குமாருக்கு நண்பர்கள் சிலருடனும் முன்விரோதம் உள்ளது.

எனவே அவரை முன்விரோதம் காரணமாக தாக்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அவரை யார் தாக்கினார்கள்? என்பது தொடர்பாக தல்லாகுளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக உதவி கமிஷனர் ஜெகநாதன் உத்தரவின் பேரில், திருப்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமாரை தாக்கியவர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News