உள்ளூர் செய்திகள்

உயிர்க்கொல்லியான எலி பேஸ்ட்

Published On 2023-07-10 06:41 GMT   |   Update On 2023-07-10 06:41 GMT
  • உயிர்க்கொல்லியான எலி பேஸ்ட் விற்பனைக்கு நிரந்தர தடை விதிக்கப்பட்டது.
  • பூச்சிக்கொல்லி மருந்து தடைச்சட்டம் 1968-ன்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மதுரை

மதுரை மாவட்ட கலெக் டர் சங்கீதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதா வது:-

ரேட்டால் என்ற வணிக பெயரில் 3 சதவீத மஞ்சள் பாஸ்பரஸ் எனும் ரசாயனம் வேளாண்மை மற்றும் இதர உபயோகங்களுக்கு பயன்படுத்த மத்திய அரசு நிரந்தர தடை விதித்துள்ளது.

பொதுவாக மக்கள் ரேட்டால் பேஸ்ட்டை எலிகளை கட்டுப்படுத்த வீடுகளில் பயன்படுத்து கின்றனர். இதை குழந்தைகள் பேஸ்ட் என கருதி உப யோகப்படுத்தும் அபாயம் ஏற்படுகிறது. இதற்கு எதிர்வினை மருந்து இல்லா ததால் மத்திய மற்றும் மாநில அரசுகள் இதன் தயாரிப்பு, விற்பனை மற்றும் பயன்படுத்துவதற்கு நிரந்தர தடை விதித்துள்ளது.

பொதுமக்கள் யாரும் மஞ்சள் பாஸ்பரஸ் என்ற ரேட்டால் பேஸ்ட்டை விவசாயம் மற்றும் வீட்டு உபயோகத்திற்கு பயன் படுத்த வேண்டாம். பூச்சி மருந்து விற்பனை நிலை யங்கள் மற்றும் இதர கடைகளில் விற்பனை செய்வது தெரிய வந்தால் மாவட்ட நிர்வாகம் அல்லது அருகில் உள்ள வேளாண் விரிவாக்க மைய பூச்சிக்கொல்லி மருந்து ஆய்வாளர்களிடம் தகவல் தெரிவிக்கலாம்.

பூச்சிமருந்து விற்பனையாளர்கள் மற்றும் இதர விற்பனையாளர்கள் மஞ்சள் பாஸ்பரஸ் எலி பேஸ்ட்டை விற்பனை செய்வது தெரிய வந்தால் பூச்சிக்கொல்லி மருந்து தடைச்சட்டம் 1968-ன்படி கடும் நடவடிக்கை எடுக்கப் படும்.

இவ்வாறு அதில் குறிப் பிடப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News